பாசிட்டிவ்வாக பறந்து போன மார்ச் : ஐஸ்வர்யா ரஜினி பதிவு

நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் தீவிரமான ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடங்கியவர் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் அங்கு தான் நடத்தி முடித்தார். அதோடு, திருவண்ணாமலை, காஞ்சி காமாட்சி அம்மன், காசி உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் தொடர்ந்து ஆன்மீக பயணம் சென்று வந்த ஐஸ்வர்யா ரஜினி, அது குறித்த புகைப்படங்களையும் எனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இந்நிலையில் … Read more

த்ரிஷாவைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

பொன்னியின் செல்வன், லியோ படங்களில் நடித்த பிறகு அரை டஜன் புதிய படங்களில் கமிட்டாகி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் த்ரிஷா. அதோடு, 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த த்ரிஷா புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயாக உயர்த்திருக்கிறார். இப்படி த்ரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதை அடுத்து நயன்தாராவும் புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த … Read more

யுவராஜ் சிங் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகும் அவரது பயோபிக்

இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று. 1983க்குப் பிறகு இரண்டாவது முறையாக அக்கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் சிங்கும் ஒருவர். இந்திய அணிக்காக 304 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 59 டி20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் மேட்ச்களிலும் விளையாடிய ஆல்ரவுண்டர். அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இடையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து அசத்தியவர். தன்னுடைய … Read more

14 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் பையா

கடந்த 2010ல் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா. இந்த படம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிற ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும், பருத்திவீரன் படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக நடித்திருந்த கார்த்தி இந்த பையா படத்தில் நகரத்து இளைஞனாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான நேரத்தில் கார்த்தி, தமன்னா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு இந்த … Read more

கைதி பாணியில் ரஜினி 171வது படத்தை திட்டமிடும் லோகேஷ்

ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். அனிரூத் இசையமைக்கிறார். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். தொடர்ந்து தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு … Read more

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணங்கள் : புற்றுநோயால் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மரணங்கள் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தான் காமெடி நடிகர் சேஷு மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் காலமாகினர். இப்போது மற்றொரு காமெடி மற்றும் குணச்சித்ர நடிகரான விஸ்வேஷ்வர(62) ராவ் காலமானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் … Read more

மே 24ல் திரைக்கு வரும் இந்தியன் 2?

1996ல் இந்தியன் படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் இந்தியன் 2. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இன்னொரு பக்கம் இந்தியன்-3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, … Read more

“உதிரிப்பூக்கள்” தந்து ரசிகர்கள் 'நெஞ்சத்தைக் கிள்ளிய' இயக்குநர் மகேந்திரன்

காலம் கடந்தும் பேசப்படும் காளி, வள்ளி, மங்கா, குமரன் என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, “முள்ளும் மலரும்” என்ற காவிய கலைப் படைப்பை தந்து, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஆற்றல் மிகு இயக்குநர் மகேந்திரனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… * சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பின் இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக் … Read more

யஷ் ஜோடியாகும் கியாரா அத்வானி

கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் 19வது படமாக 'டாக்சிக்' உருவாகி வருகிறது. கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். தற்போது படத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகள் தீவிரமாகி உள்ளன. இந்த படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தவிர மற்றொரு … Read more

ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது தாய் மாமா கார்த்திக்குடன் சென்ற வாரம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தம்பி தான் இந்த கார்த்திக் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை பற்றிய சில தகவல்களை அவரே கூறியுள்ளார். கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் … Read more