25 வருட கார் கனவு : ஆனந்தத்தில் அர்ச்சனா

சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா தனது நீண்டநாள் கனவான மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் மதிப்பு ரூ.75 லட்சம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அர்ச்சனா, ‛இதற்காக 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன்' என எமோஷ்னலாக பேசி கண்ணீர் வடிக்கிறார். அவரை போலவே அவரது தாயார், தங்கை, மகள் என அனைவரும் தங்கள் கனவு நனவான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வர அர்ச்சனாவின் உழைப்பை … Read more

பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணம் : குழம்பிய ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். திரைப்படங்களில் தீவிர வாய்ப்பு தேடிவரும் அவர், தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மணமேடையில் மாப்பிள்ளையாக இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பாலாஜிக்கு திடீர் திருமணமா? என அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம் மணப்பெண்ணின் முகம் சரிவர தெரியாத அளவுக்கு க்ராப் செய்து வெளியிட்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சிலர் ஏப்ரல் 1 என்பதால் தன் நண்பர்களையும் ரசிகர்களையும் ஏமாற்ற ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை … Read more

'ரத்னம்' பட சம்பளத்தை கேட்டு விஷால் வழக்கு

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், கடனை திருப்பி செலுத்தும் வகையில் விஷால் நடிக்கும் படத்தின் சம்பளம், அவர் தயாரிக்கும் படத்தின் உரிமைகளை தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால் லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக … Read more

பிளாஷ்பேக்: பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்

சிவாஜி நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியா ஏதாவது ஒரு விதத்தில் அந்த படம் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சென்று விடும். அப்படியான ஒரு படம் தராசு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த படத்தில் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராஜகணபதி என்பவர் இயக்கி இருந்தார். சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், பிரபு ஜோடியாக அம்பிகாவும் நடித்திருந்தார்கள். இவர்கள் தவிர … Read more

'சென்னை ஸ்டோரி' படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்

பிலிப் ஜான் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கும் சர்வதேசத் திரைப்படமான 'சென்னை ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. திமேரி என் முராரி எழுதிய 'தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது. இந்தக் காலத்து காதல், காமெடி கலந்த படமாக சென்னை பின்னணியில் இப்படம் உருவாக உள்ளது. தனியார் துப்பறியும் நிபுணர் அனு என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கிறார். “புதிய நாள், புதிய படம், புதிய எனர்ஜி, நன்றி,” என பூஜை மற்றும் … Read more

தெலுங்கிலும் சாதனை படைக்குமா 'மஞ்சும்மேல் பாய்ஸ்'?

சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் பிப்ரவரி 22ம் தேதி மலையாளத்தில் வெளியானது. தமிழகத்திலும் அப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாளத்திலேயே வெளியானது. இங்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய லாபத்தைக் கொடுத்தது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தற்போது இப்படத்தைத் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஏப்ரல் 6ம் … Read more

ஏமாற்றிய 'ரெபல்' : காப்பாற்றுவாரா 'கள்வன்'?

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இந்த ஆண்டில் அவரது இசையில் “கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, சைரன், ரெபல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அவர் நாயகனாக நடித்த 'ரெபல்' படம் மார்ச் 22ல் வெளியானது. அடுத்து இந்த வாரம் மார்ச் 4ம் தேதி 'கள்வன்' படமும், மார்ச் 12ம் தேதி 'டியர்' படமும் வெளியாக உள்ளது. 'ரெபல்' படம் வெளியீட்டிற்கு முன்பு ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளிவந்த … Read more

அடுத்த தலைமுறைக்கும் சென்ற ராகவா லாரன்ஸின் கல்வி சேவை

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதளத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து தனது கணவர் இறந்து விட்டதாகவும், இந்த குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அந்த குழந்தைகளை என் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க … Read more

சோனியா அகர்வாலின் ‛7ஜி' படத்தின் டீசர் வெளியானது

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 7ஜி. ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோரின் வாழ்க்கையில் ஒரு பேய் நுழைகிறது. அப்படி நுழைந்து அது என்னென்ன தொல்லைகளை கொடுக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் இந்த … Read more

சூர்யா படங்கள் : தொடர்ந்து மாறி மாறி வரும் அறிவிப்புகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு … Read more