அமைதியாக ஓய்வெடுங்கள் பாலாஜி சித்தப்பா : நடிகர் அதர்வா உருக்கம்

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, ஆர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலாஜி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். டேனியல் பாலாஜியின் சகோதரான மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா அவரது இரங்கலில், “வாழ்க்கை விஷயங்களில் நம்மை நாமே அதிகம் இணைத்துக் … Read more

'ஆடு ஜீவிதம்' முதல் நாள் வசூல் ரூ.16.70 கோடி

பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான மலையாளப் படம் 'ஆடு ஜீவிதம்'. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூலாக 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். நடிகர் … Read more

லண்டனில் தனி பங்களா வாங்கிய பிரபாஸ்?

பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில … Read more

'பேமிலி ஸ்டார்' படத்திற்கு 'குஷி' வரவேற்பை நம்பும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. அவருடைய 'அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்கள். குறிப்பாக 'கீதா கோவிந்தம்' படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற ஒரு படமாக அமைந்தது. நேரடியாக தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் வெற்றி பெறாமல் போனதால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து கடந்த ஆண்டில் … Read more

பயமாக இருக்கிறது – சீரியல் வில்லி பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் விஜயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், '33 வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் சிறகடிக்க ஆசை தொடர் எனக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சீரியலில் ஏன் மீனாவை கொடுமை படுத்துகிறீர்கள். நேரில் பார்த்தால் நான் … Read more

சின்னத்திரையில் ‛தித்திக்குதே' ஸ்ரீதேவி

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் கடைசி மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழில் காதல் வைரஸ், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நிகழ்ச்சியில் நடுவராக ஸ்ரீதேவி கலந்து கொண்டுள்ளார். இப்போதும் பார்ப்பதற்கு இளமையாக இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகுடன் ஸ்ரீதேவி ஜொலிக்கிறார். எனவே, அவரை மீண்டும் நடிக்க வர … Read more

2 நாய்கள் மட்டுமே நடித்த படம் : விழாவிலும் பங்கேற்பு

இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் என்பவர் தயாரித்திருக்கிறார். அதற்கு 'கிளவர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார். வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகுநாத் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிமுக விழாவில் படத்தில் நடித்த நாய்களும் பங்கேற்றது. படம் பற்றி இயக்குனுர் செந்தில்குமார் கூறும்போது “இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை … Read more

தன் கதையில் தானே நடிக்கும் சோனா

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாலும் பின்னர் கவர்ச்சி நடிகை ஆனவர் சோனா. 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்து பெரும் இழப்பை சந்தித்தார். சொந்தமாக செயற்கை நகை வியாபாரம் செய்தார். எதுவும் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் தயாரித்து, இயக்கி வருகிறார். இது 'ஷார்ட் பிளிக்ஸ்' என்ற ஓடிடி தளத்தில் இரண்டு சீசன்களாக வெளியாகிறது. முதல் சீசனுக்கான படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த தொடரில் 5 வயது சோனாவாக ஆதினி … Read more

அர்னால்டுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது

ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். பாடி பில்டராக இருந்து சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர். 1970ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுமான இவர் பின்னர் 1984ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். அதன் பிறகு வெளிவந்த இதன் 4 பாகங்களிலும் நடித்தார். பிரடியேட்டர், ராவ் டீல், ட்ரூ லைவ்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 'எக்ஸ்பண்டபிள்' படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்தார். அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. என்றாலும் … Read more

‛அழகி' இப்போதும் பேசப்படுவது ஏன்…? – பார்த்திபன் விளக்கம்

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று வெளியான படம் 'அழகி'. 22 ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடிப்பில் வெளியானது. இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்வில் தயாரிப்பாளர் உதயகுமார், தேவயானி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பார்த்திபன் பேசியதாவது : தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர … Read more