'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரைப் பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் உள்ள சில இயக்குனர்களுக்குக் கூட இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததா என்று வியக்கும் அளவிற்கு 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் சிதம்பரம் மற்றும் குழுவினர் இங்கு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள். அப்படம் 'குணா' படத்தில் இடம் பெற்ற குகையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அப்படத்தின் தாக்கத்தால்தான் இந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தையே உருவாக்கினர். அதனால், தமிழகத்திலும் படம் பிரமாதமாக ஓடி 50 கோடி வசூலைக் கடந்தது. படம் வெளியான சில தினங்களிலேயே 'குணா' நாயகன் … Read more

ஏழு தமிழ்ப் படங்களை பின்னுக்குத் தள்ளிய 'காட்சில்லா x காங்'

தமிழ்ப் படங்களுக்கான சோதனை இந்த வருடத்தின் மூன்றாவது மாத முடிவிலும் தொடர்கிறது. நேற்று மார்ச் 29ம் தேதி ஏழு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அந்தப் படங்களில் ஒரு சில படங்களுக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. ஆனாலும், அப்படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் வரவில்லை என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நேற்று வெளியான ஹாலிவுட் படமான ''காட்சில்லா x காங் – த நியூ எம்பயர்' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக … Read more

ஆண்ட்ரியா படத்தை திரையிட கோர்ட் தடை

ஆண்ட்ரியா நடித்து முடித்துள்ள படம் 'கா : தி பாரஸ்ட்'. நாஞ்சில் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா தவிர சலிம் கோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி பாபு இசை அமைத்திருந்தார். ஷாலம் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சன் பிசினஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

பிளாஷ்பேக் : 90 வருடங்களுக்கு முன்பே 'லிப் லாக்' முத்தக் காட்சியில் நடித்த நடிகை

இந்திய சினிமாவில் முதல் புகழ் பெற்ற நடிகை என்றால் அது தேவிகா ராணிதான். 1908ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்த இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ அதிகாரி. பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கில அரசில் பெரிய பதவியில் இருந்தவர்கள். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உறவினர். லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் … Read more

இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா!

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. சமீப காலமாக திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வரும் பாலா, இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பது என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மருத்துவமனை கட்டி அதில் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க … Read more

மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை … Read more

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55. சென்னை, புரசைவாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். சென்னை, அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் படித்தவர். 25 வருடங்களுக்கு முன்பு தனியார் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி' என்ற டிவி தொடரில் 'டேனியல்' என்ற கதாபாத்திரத்தில் … Read more

மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு!

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது. பின்னர் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ரத்ன குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் மீண்டும் இத்திரைப்படத்தை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொடங்கியுள்ளனர். இப்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்!

இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்' . அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கைலாசம் கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபகாலமாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் சம்மந்தப்பட்ட டப்பிங் பணிகளை கவின் முடித்ததாக … Read more

விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தற்போது குறிப்பிட்டு சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் அவர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் நிதிலனை அழைத்து நயன்தாரா … Read more