ஏப்ரலில் வெளியாகும் ‛அரண்மனை 4'

கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை … Read more

சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா?

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு … Read more

பிறந்தநாளில் திருப்பதியில் குடும்பத்தினர் உடன் சாமி தரிசனம் செய்த ராம் சரண்

தெலுங்கு நடிகர் ராம்சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் ஜருகண்டி என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷங்கரின் வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான செட்டுகளுடன் இந்த பாடல் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது. தமன் இசைஅமைத்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் தனது மனைவி, மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ராம்சரண். இந்த படத்தை அடுத்து புஜ்ஜி பாபு சனா … Read more

சித்தார்த் – அதிதி ராவ் ரகசிய திருமணம்?

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவைக் காதலித்தார். அந்த காதலும் கை கூடவில்லை. இந்நிலையில் 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதலில் … Read more

முகமூடி மனிதனாக பிரித்விராஜ் : ரசிகர்கள் ஏமாற்றம்

சலார் படம் வெளியானதை தொடர்ந்து அதில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தொடர்ந்து மீடியாக்களின் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் நாளை மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலமாக சென்று பம்பரமாக சுற்றி புரமோஷன் செய்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' படத்தில் … Read more

வேட்டையன் டீசர் எப்போது வருகிறது தெரியுமா ?

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், கடப்பா ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வருகின்ற … Read more

தக் லைப் : ஜெயம் ரவிக்கு பதிலாக நிவின்பாலி?

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், கமல் நடிக்கும் தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படம் இது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டது. இதேபோன்றுதான் … Read more

புலி முருகன் பாணியில் உருவாக்கப்பட்ட கங்குவா விஎப்எக்ஸ் காட்சி

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. வரலாற்று பின்னணி கொண்ட கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவில் முடிந்துவிட்ட நிலையில் இன்னொரு பக்கம் படத்தில் அதிகம் இடம் பெறக்கூடிய விஎப்எக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள புலி சம்பந்தப்பட்ட காட்சி … Read more

ஏப்-11ல் மீண்டும் ஒரு மலையாள தமிழ் படம் : ரசிகர்களின் வரவேற்பை பெறுமா?

உணர்வுப்பூர்வமான நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை எடுத்தால் மொழி ஒரு தடை இல்லை என்பதை சமீபத்தில் மலையாளத்தில் உருவாகி தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் நிரூபித்தது. படத்தின் கதை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது என்றால், இந்த படத்தில் இடம்பெற்ற கொடைக்கானல் குணா குகை மற்றும் குணா பட பாடல், இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் இடம்பெற்ற தமிழ் முகங்கள், தமிழ் வசனங்கள் என அனைத்தும் சேர்ந்து தமிழ் ரசிகர்களையும் இந்த … Read more

ஓடிடியில் வெளியானது : ஆங்கிலேயர்களுக்கு எதிராக ரகசிய வானொலி நடத்திய உஷா மேத்தாவின் கதை

இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, காந்தி இப்படித்தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்ட வடிவங்களை கொண்டிருந்தது சுந்திர யுத்தம். அவற்றில் ஒன்றுதான் ஆங்கிலேயர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டி ரகசிய வானொலி நடத்தி தலைவர்களின் வீரமிக்க உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த வீரப் பெண்மணி உஷா மேத்தாவின் கதை. அதிகம் அறியப்படாத உஷா மேத்தாவின் வரலாறு … Read more