பிளாஷ்பேக் : நடனத்தில் பத்மினியை வென்ற எம்ஜிஆர்

பொதுவாக மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நடனம் அந்த அளவிற்கு வராது என்பார்கள். அவரும் தன் படங்களில் எளிமையான நடன அசைவுகளையே பயன்படுத்துவார். ஆனால் சில படங்களில் நடனத்தில் அசத்தி இருப்பார். அதில் முக்கியமானது 'மன்னாதி மன்னன்' படத்தில் அவர் ஆடிய நடனம். இந்த படத்தில் அவர் படத்தின் நாயகி பத்மினியையே நடனத்தில் வென்று விடுவார். கதைப்படி நாட்டிய கலைஞரான பத்மினிக்கு அந்த கலையில் தான்தான் பெரிய ஜீனியஸ் என்ற நினைப்பு இருக்கும். நடன நிகழ்ச்சி ஒன்றில் பத்மினி … Read more

தேர்வுகள் முடிந்து விட்டதால் 'பேமிலி ஸ்டார்' பார்க்க வாருங்கள் : மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா அழைப்பு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் அவர் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கி உள்ளார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற 5ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும், அறிமுக விழாவும் ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் … Read more

ராம்சரணின் பிறந்தநாளில் வெளியாகும் கேம் சேஞ்சர் முதல் பாடல்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே .சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். தமன் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் கேம் சேஞ்சர் திரைக்கு வருகிறது. நாளை ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசாக நாளை காலை 9 மணிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி … Read more

யாஷிகா ஆனந்தின் 'படிக்காத பக்கங்கள்'

திகில் படமா, கிரைம் த்ரில்லர் படமா, பேய் படமாக கூப்பிடுங்கள் யாஷிகா ஆனந்த்தை என்கிற நிலைதான் இப்போது. ஏற்கெனவே பல திகில் படங்களில் நடித்து முடித்து விட்ட யாஷிகா ஆனந்த் தற்போது நடித்துள்ள படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. செல்வம் மாதப்பன் இயக்கி உள்ளார். யாஷிகாவுடன் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்காடுக்கு ஒரு … Read more

'புஷ்பா' இயக்குனருடன் மீண்டும் இணைந்த ராம்சரண்

ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனது போர்ஷனை முடித்து கொடுத்துவிட்ட ராம் சரண் அடுத்து புச்சி பாபு இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ரித்தி சினிமா, மைத்ரி மூவீஸ் நிறுவனங்கள இணைந்து தயாரிக்கிறது. படத்தின் பணிகள் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில் ராம் சரணின் 17 வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை புஷ்பா … Read more

ரஷ்ய மொழியில் வெளியாகும் முதல் மலையாள படம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான மலையாள படம் 'வாலாட்டி'. தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இந்த படம் நாய்களின் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த காதல் கதையுடன் சிறுவர்களுக்கும், நாய்களுக்குமான உறவையும் படம் பேசியது. முதன் முறையாக ஹாலிவுட் படங்கள் போன்று நாயை பேச வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தனர். அனிமேஷன் காட்சிகளை பயன்படுத்தாமல் நிஜ நாய்களை நடிக்க வைத்தனர். இதில் 100 நாய்கள் வரை நடித்திருந்தது. … Read more

போதை, ரத்தம் இல்லா குடும்ப படம் 'ஜெனி'

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் 'ஜெனி'. இதனை மிஷ்கின் உதவியாளர் அர்ஜுனன் இயக்குகிறார். ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கிர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இது அலாவுதீன் அற்புதவிளக்கு கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது. மந்திர குவளை, பூதத்தின் தோற்றத்தில் ஜெயம்ரவி, சுற்றிலும் தேவதைகள் போன்று ஹீரோயின்கள் ஆகியவை இடம் பிடித்துள்ளனர். ஆனால் இது அம்மா, … Read more

பிளாஷ்பேக் : 60 ஆண்டு, 2500 படங்கள் : யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்த சுகுமாரி

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர் சுகுமாரி. எந்த வேடம் என்றாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுகிற தன்மை இருவருக்கு வாய்த்தது. ஒருவர் மனோரமா, இன்னொருவர் சுகுமாரி. அதனால்தான் சுகுமாரியை மலையாள மனோரமா என்று செல்லமாக அழைப்பர்கள். காலையில் ஒரு முண்டு(வேட்டி)வும் ஒரு பிளவுசையும் அணிந்து காரில் ஏறினால் மாலைக்குள் அதே உடையில் நான்கு படத்தில் நடித்து விட்டு திரும்புவார் என்று சுகுமாரி பற்றி அப்போதே கூறுவார்கள். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நாகர்கோவிலில் பிறந்து … Read more

சினிமாவில் யானை ஆதிக்கம்

விலங்குகளை வைத்து படம் இயக்குவது என்பது சினிமா கண்டுபிடித்த சில ஆண்டுகளிலேயே நடைமுறைக்கு வந்த ஒன்று. தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'வள்ளி திருமணம்' படத்தில் யானை ஒரு கேரக்டராக நடித்தது. 'சந்திரலேகா' படத்தில் யானை கூட்டத்தையே நடிக்க வைத்தார் எஸ்.எஸ்.வாசன். எம்.ஜி.ஆர் நடித்த 'நல்ல நேரம்' யானைகள் சினிமாவில் மிக முக்கியமான படம். பிற்காலத்தில் கமல் நடித்த 'ராம் லக்ஷ்மன்'. ரஜினி நடித்த 'அன்னை ஓர் ஆலயம்', ராம நாராயணனின் 'ஆடிவெள்ளி' உள்ளிட்ட பல படங்களில் யானைகள் … Read more

காமெடி நடிகர் சேஷூ காலமானார்

மாரடைப்பு காரணமாக சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் சேஷூ(60), காலமானார். நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருந்து வந்தவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வந்தார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணித்தார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை … Read more