'ஆடு ஜீவிதம்' படத்திற்கு சூர்யா வாழ்த்து

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'ஆடுஜீவிதம்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகப் போகிறது. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை. 'ஆடுஜீவிதம்' படத்திற்கு நடிகர் சூர்யா தனது … Read more

பிரபல இயக்குனர் மகனுக்கு வில்லனாகும் ஒளிப்பதிவாளர்

தமிழில் மைனா, கும்கி, பைரவா, காக்கி சட்டை, ஸ்கெட்ச், தர்மதுரை போன்ற பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது தெரியவந்து தற்போது அவரின் ஆசை நிறைவேறியது. அதன்படி, இயக்குனர் முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதில் ஏற்கனவே நடிகர் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் … Read more

செந்தில், யோகி பாபு நடிக்கும் ‛கே.எம்.கே'

2012ம் ஆண்டில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் 'சகுனி'. இதனை சங்கர் தயாள் என்பவர் இயக்கினார். பெரும் எதிர்பார்பில் வெளிவந்த இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷங்கர் தயாள் புதிய படம் ஒன்றைக் இயக்கியுள்ளார். நடிகர் செந்தில், நடிகர் யோகி பாபு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. ஷங்கர் தயாள் கூறுகையில், “குழந்தைகளை … Read more

‛பேமிலி ஸ்டார்' வெற்றிக்காக எல்லம்மா கோவிலில் வழிபட்ட மிருணாள் தாக்கூர்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் என்றால் யார் என்று தான் தென்னிந்திய ரசிகர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அழகிய காதல் கவிதையாக வெளியான சீதாராமம் படத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் மிருணாள் தாக்கூர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா திரைப்படமும் அவரது சிறப்பான நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் … Read more

‛டபுள் டக்கர்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தமிழில் மீரா மகதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி சற்று கவனத்தை ஈர்த்தது. முழுக்க முழுக்க குழந்தைகளை குறிவைத்து உருவாக்கியுள்ள இப்படத்தை வருகின்ற ஏப்ரல் 5ம் … Read more

திருச்சியில் எதிர்பாராமல் ஒன்றுகூடிய ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா' கூட்டணி

பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுக நடிகர்கள் என்கிற அளவில் வளர்ந்து கொண்டிருந்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், விமல், சூரி மற்றும் சதீஷ். இப்போது ஒவ்வொருவரும் திரையுலகில் அவர்களுக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் விமல், சிவகார்த்திகேயன், சதீஷ் அனைவருமே இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். 2013ல் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் இருவரும் கதாநாயகனாக நடிக்க சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் … Read more

கொரோனா குமார் டூ வைப் குமார்

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு இப்படத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த கதையில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளனர். அதோடு இப்படத்திற்கு கொரோனா குமார் என்கிற தலைப்பைப் மாற்றி 'வைப் குமார்' என தலைப்பு … Read more

'ஹனுமான்' தமிழ் ஓடிடி ரிலீஸ் எப்போது ?

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்திக்கு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஹனுமான்'. இப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை புரிந்தது. படம் வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ஓடிடியில் தெலுங்கில் மட்டுமே வெளியானது. மற்ற மொழிகளில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது அதை அறிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், … Read more

ரகசியத்தை உடைத்த கமல்ஹாசன் : அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்

தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் சில முக்கியமான பிரம்மாண்டமான படங்கள் வெளிவர உள்ளது. அவற்றில் 'கல்கி 2898 ஏடி' படமும் ஒன்று. நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசனும் இப்படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் கதாபாத்திரம் தான் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் என்ற தகவல் ஏற்கெனவே பரவி இருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தில் தான் சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இது படத்தின் … Read more

'அப்டேட்' கேட்டால் ஐபிஎல் பார்க்குறியா : வெங்கட் பிரபுவை வெளுத்த விஜய் ரசிகர்கள்

விஜய், அஜித் புதிய படங்களில் நடிக்கிறார்கள் என்றால் அந்தப் படங்களைப் பற்றிய அப்டேட்டை அடிக்கடி தந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்களது ரசிகர்கள் கிடைக்கும் 'கேப்'களில் எல்லாம் 'அப்டேட் எங்கே, அப்டேட் எங்கே' என கேட்டுக் கொண்டே இருப்பார்கள். விஜய் நடிக்கும் 'கோட்' படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தீவிர கிரிக்கெட் வெறியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இயக்கிய முதல் படமான 'சென்னை 28' படமே கிரிக்கெட்டைப் பற்றிய படம்தான். 'கோட்' பட … Read more