கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் ஹீரோ

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவில் மட்டுமல்ல அதற்கு அதிகமான வரவேற்பை தமிழகத்திலும் பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற குணா குகையை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்ததும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மேலும் காதலுக்காக எழுதப்பட்ட இந்த பாடல் இந்த படத்தில் நட்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்த விதம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இந்த … Read more

இனியா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தீப்தி

சின்னத்திரை நடிகை தீப்தி கபில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த புராஜெக்டிலும் கமிட்டாகாத அவர், தற்போது சூப்பர் ஹிட் தொடரான ‛இனியா' தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இனியாவை போலீஸில் காட்டிக் கொடுக்கும் பெண்ணாக என்ட்ரி கொடுத்துள்ள தீப்தி, இனிவரும் எபிசோடுகளில் இனியாவிற்கு வில்லியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இனியா தொடரில் கமிட்டானதை ஆல்யாவுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு தீப்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் துபாய் கிளம்பிய அல்லு அர்ஜுன்

இந்திய சினிமா பிரபலங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு கவுரவிப்பது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த இரண்டு வருடங்களில் ;புஷ்பா' படம் மூலமாக இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ரசிகர்களை பெறும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளார். அந்த வகையில் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுனின் மெழுகுச்சிலை இடம்பெற உள்ளது. இதற்காக கடந்த வருடம் இந்த சிலையை செய்வதற்கு தேவைப்படும் … Read more

கவர்ச்சி குயினாக மாறும் காவ்யா அறிவுமணி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான காவ்யா அறிவுமணி. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் அடைந்தார். இதனையடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். விரைவில் அந்த படங்கள் வெளியாக உள்ளன. தற்போது சினிமாவின் தீவிரமாக வாய்ப்பு தேடி வரும் காவ்யா அறிவுமணி சமீபகாலங்களில் கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் … Read more

சீரியல் ஸ்டன்ட் காட்சியில் ரிஸ்க் எடுத்த சாந்தினி

நடிகர் ஸ்ரீகுமார் தான் நடிக்கும் சீரியல்களில் மிகவும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகையையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வைத்துள்ளார். வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீகுமார், சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சீரியலின் ஒரு காட்சியில் சாந்தினியும், ஸ்ரீகுமாரும் பைக்கிலிருந்து கீழே விழுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் உண்மையாகவே பைக்கிலிருந்து … Read more

‛இனிமேல்' ஆல்பம் எப்படி இருக்கு?

கமல்ஹாசன் தயாரிப்பில், அவரே பாடல் வரிகள் எழுத உருவாகி உள்ள இசை ஆல்பம் ‛இனிமேல்'. கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஆல்பத்திற்கு இசையமைத்து பாடி, நடித்துள்ளார். அவருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தபாடலுக்கான முன்னோட்டம் வெளியானது. அதில் லோகேஷ், ஸ்ருதி இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர். இதை வைத்து நிறைய மீம்ஸ்களும், விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக லோகேஷை குறிப்பிட்டு நடிகை காயத்ரி, ‛‛உங்க படத்துல ஹீரோயின் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டுவீங்க ஆனா நீங்கள்… … Read more

10 நிமிட சந்திப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் : கட்டணம் விபரம் வெளியிட்ட அனுராக் காஷ்யப்

முன்னணி பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தார். லியோ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். ஆனால் பாலிவுட்டில் வெப் தொடர்களிலும், படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு தனது மனதில் தோன்றியதை சமூக வலைத்தள பதிவில் தைரியமாக வெளியிடுகிறவர். சமீபத்தில் தென்னிந்திய படங்களிடமிருந்து பாலிவுட் படங்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் வெளியான 'மஞ்சுமோல் பாய்ஸ்' படத்தையும் பாராட்டி தள்ளினார். தன்னை … Read more

ஆக்ஷன் காட்சியில் நடித்த போது மயங்கி விழுந்த சமந்தா

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தை அடுத்து தற்போது சிட்டாடல் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார் சமந்தா. இந்த தொடரில் நடித்து வந்தபோது ஒருநாள் சமந்தா மயங்கி விழுந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‛‛குஷி படத்திற்கு பிறகு சிட்டாடல் தொடரில் நடித்தேன். இந்த தொடரில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ஆக்ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒருநாள் திடீரென்று மயங்கி விழுந்தேன். அதையடுத்து என்னுடைய ஊட்டச்சத்துடன் நிபுணர் … Read more

படப்பிடிப்பில் இவானாவை திட்டினேன்: பாரதிராஜா

இயக்குனர் பாராதிராஜா தனது படங்களில் நடிக்கும் நடிகைகளை அடிப்பது, திட்டுவது ஒன்றும் புதிதில்லை. அவரிடம் அடி வாங்காத நடிகைகளே இல்லை என்பார்கள். அடி வாங்கியவர்களும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் “மோதிர கையால் குட்டுப்பட்டேன்” என்று பெருமையாக சொல்வார்கள். அவர் நடித்து முடித்துள்ள 'கள்வன்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாசும், இவானாவும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா “இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய … Read more

வாட்ஸ் ஆப் குரூப் விபரீத்தை சொல்லும் படம்

வாட்ஸ் ஆப் குரூப் என்பது இப்போதைய டிரண்டிங். குடும்பத்தினர், நண்பர்கள், ஒரே இடத்தில் பணியாற்றுகிறவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கைந்து வாட்ஸ் அப் குரூபிலாவது இருக்கிறார்கள். இதனால் பல நன்மைகள் இருந்தாலும் சில விபரீதங்களும் இருக்கிறது. அதை பற்றி பேசி இருக்கிற படம் 'ஒரே பேச்சு ஒரே முடிவு'. இந்த படத்தில் புருஸ்லீ ராஜேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் … Read more