திமுகவிற்கு பிரச்சாரம் செய்யவில்லை: சூரி பேட்டி

காமெடி நடிகராக இருந்து இப்போது கதையின் நாயகனாக வளர்ந்திருப்பவர் சூரி. விடுதலை படம் அவருக்கு புதிய திருப்பத்தை கொடுத்தது. தற்போது அவர் நடித்துள்ள 'கொட்டுக்காளி' படம் விருதுகளை குவித்து வருகிறது. மேலும் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். திமுக அமைச்சரும், நடிகருமான உதயநிதிக்கு சூரி நெருக்கமானவர். சூரிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டுக் கொடுத்தவர் உதயநிதி. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு முன்னணி நடிகரை பிரச்சார களத்தில் திடீரென இறக்குவது திமுகவின் வழக்கம். … Read more

கிளாமரை ஏற்றும் 'பேஷன் பேபி' சமந்தா

தமிழில் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சமந்தா மீது ரசிகர்களுக்கு ஒரு அபிமானம் உண்டு. தெலுங்கில் சில பல சூப்பர் ஹிட்களில் நடித்த சமந்தா அடுத்து ஹிந்திப் பட உலகை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளார். ஹிந்தி வெப் தொடரான 'தி பேமிலி மேன் சீசன் 2' மூலம் ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமானார். அடுத்து 'சிட்டாடல் – ஹனி பன்னி' வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை அடுத்து ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற … Read more

சிவகார்த்திகேயனுக்கு நடனம் சொல்லித் தந்த ஸ்ரீ லீலா

தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் கவனம் பெற்று முன்னணி நடிகை அளவிற்கு உயர்ந்துள்ளவர் நடிகை ஸ்ரீ லீலா. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இவர் ஜோடியாக நடித்த குண்டூர் காரம் திரைப்படமும் அதிலும் குறிப்பாக தமன் இசையில் மகேஷ்பாபுவுடன் இவர் இணைந்து அதிரடி ஆட்டம் போட்ட 'குர்ச்சி மடத்தப்பெட்டி' என்கிற பாடல் இப்போதும் இணையதளத்தில் வைரலான ஒன்று. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா இருவரும் கலந்து … Read more

பால்கனியில் மாமரம் வளர்க்கும் பார்வதி

தென்னிந்திய மொழிகளில் நல்ல கதையம்சம் கொண்ட செலெக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை பார்வதி. சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து நடித்து வருகிறார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ள பார்வதி அந்த படத்தின் ரிலீஸை ஆவலாக எதிர்பார்த்து வருகிறார். சினிமா தவிர அவருக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் மாடி தோட்டத்தை பராமரிப்பதும் ரொம்பவே பிடித்தமான விஷயங்கள். அந்தவகையில் தனது வீட்டு பால்கனியில் கிட்டத்தட்ட 36 வகையான … Read more

'இளையராஜா' பயோபிக் : இசையமைக்க சம்மதிப்பாரா ஏஆர் ரஹ்மான்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படமான 'இளையராஜா' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அப்படத்தின் முதல் பார்வையையும் அன்று வெளியிட்டார்கள். அதில் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. தன்னுடைய பயோபிக் படத்திற்கு இளையராஜாவே இசையமைப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தானே இசையமைப்பது சரியில்லை என இளையராஜா மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், இப்படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரஹ்மானிடம் இது பற்றி பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தையில் … Read more

சீரியலில் கம்பேக் கொடுக்கும் சரண்யா துராடி

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகையாக மிளிர்ந்தவர் சரண்யா துராடி. வெள்ளித்திரையில் இவர் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன், வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால், அந்த சீரியல்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் சில மாதங்களாக வாய்ப்புகள் இன்றி தவித்த சரண்யா தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் … Read more

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் கோலாகலம்

சின்னத்திரையில் வெளிச்சம் பெற்று தற்போது சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா. விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார். இந்திரஜா தனது உறவுக்காரரான கார்த்திக்கை காதலித்தார். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஒருவாரமாக திருமணம் தொடர்பான நிகழ்வுகள் கொண்டாட்டமாக நடந்து வந்தன. இந்நிலையில் இந்திரஜா – கார்த்திக் திருமணம் மதுரையில் இன்று(மார்ச் … Read more

11 வருட தவம் : 'ஆடுஜீவிதம்' இயக்குனருக்கு ஸ்வேதா மேனன் வாழ்த்து

மலையாள திரையுலகில் நடிப்பு திறமை, கவர்ச்சி என இரண்டையும் ஒன்றாக கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். இப்போதும் இவர் நடித்த ரதி நிர்வேதம் படம் தான் இவரது விலாசமாக ரசிகர்களிடம் அறியப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'களிமண்ணு' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஸ்வேதா மேனன். அந்த படத்தை இயக்கியவர் தான் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பிளஸ்சி. 'களிமண்ணு' படத்திற்காக அப்போது … Read more

ஹோலி பண்டிகை கொண்டாடிய ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். சினிமாவில் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கிளாமர் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது மஞ்சள் நிற … Read more

வா வாத்தியாரே… – கார்த்தி பட டைட்டில் உறுதியானது

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 26வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் வா வாத்தியாரே என்று கூறப்பட்டாலும், இதுவரை படக்குழு அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் கார்த்தி 26வது படத்தின் டைட்டில் ‛வா வாத்தியாரே' என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், வா வாத்தியாரே … Read more