ரமணா லொகேஷனில் எஸ்.கே 23 படப்பிடிப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி பதிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான படம் ரமணா. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில், விஜயகாந்த் போலீஸிடம் சரண் அடையும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 23 ஆண்டுகள் கழித்து தனது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் படப்பிடிப்பையும் இதே ரயில் நிலையத்தில் நடத்தி இருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ‛‛மிஸ் யூ கேப்டன்'' என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், … Read more

ஆக்ஷன் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் ‛தி புரூப்'

நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் சில மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தி ப்ரூப் என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் ராதிகா இந்த படத்தை இயக்கி உள்ளார். ரித்விகா, அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. … Read more

அண்ணாத்த ஆடுறார்… – கமல் பகிர்ந்த போட்டோ

இந்தியன் 2 படத்தை முடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன்னை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ராஜ்பார்வை போன்ற படங்களை இயக்கிய, சிங்கீதம் சீனிவாச ராவ்விற்கு ‛அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் ஒரு பாராட்டு விழா நடத்தினார் கமல். இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், வைரமுத்து, சுஹாசினி, சந்தானபாரதி, நடன மாஸ்டர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடன … Read more

ரேவதியுடன் ராம்ப் வாக் நடந்த வாணி கணபதி

நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி, நடிகை மட்டுமல்ல பரதநாட்டிய கலைஞரும் கூட. இவரும் நடிகை ரேவதியும் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற உறுப்புகள் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் அங்கிருந்த மேடையில் ஒன்றாக ராம்ப் வாக் நடந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். தாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி கணபதி. இதுகுறித்து வாணி கூறும்போது, “ரேவதியை அவர் … Read more

துல்கர் சல்மானை தொடர்ந்து கமல் படத்தை விட்டு வெளியேறிய ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்யா லஷ்மி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்காலிகமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே இந்த படத்திலிருந்து … Read more

பாலிவுட் நடிகையல்ல நம்ம பிரியங்கா மோகன் தான்…

தமிழில் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகி, 'எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது 'பிரதர்' படததில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரியங்கா மோகன். அவரது தோற்றமும், அவர் நடித்த கதாபாத்திரங்களும் அவரை ஒரு பக்கத்து வீட்டுப் பெண் தோற்ற நடிகையாகவே நமக்கு பழக்கப்பட்டுப் போனது. புடவையில் மிகவும் பாந்தமாக இருப்பவர் பிரியங்கா மோகன். தற்போது இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்களைப் பார்த்த … Read more

ஒரு பக்கம் விஜய்யின் கேரளா 'அப்டேட்ஸ்', மறுபக்கம் அஜித்தின் பைக் 'அப்டேட்ஸ்'

தமிழ் சினிமாவில் இன்றைய முக்கிய போட்டியாளர்கள் யார் என்று கேட்டால் விஜய், அஜித் என்றுதான் சொல்வார்கள். ரஜினி, கமல் சூப்பர் சீனியர்களாகி அவர்கள் வேறு ஒரு தளத்தில் சென்றுவிட்டார்கள். அதனால், விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் சண்டையிட்டுக் கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதுவும் இரண்டு வருடம் வரை மட்டும்தான் நடக்கப் போகிறது. அதன்பின் விஜய் அரசியல் பக்கம் போய்விட்டால், அஜித்துக்கு இந்த போட்டி கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த சில நாட்களாக விஜய், … Read more

நான் ரெடி : புதிய சீரியலுக்கு வாய்ப்பு தேடும் எதிர்நீச்சல் நடிகை

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யா தேவராஜன். சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர், அருவி தொடரின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தற்போது இவரது நடிப்புக்கு பாசிட்டிவான கமெண்டுகள் கிடைத்து வரும் நிலையில் புதிய ப்ராஜெக்ட்டுகளிலும் கமிட்டாகி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 'புதிய ப்ராஜெக்ட்டுகளில் நடிக்க முடிவெடுத்துள்ளேன். நல்ல டீம் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்' … Read more

'கோட்' நாயகி மீனாட்சியின் 'புக்கட்' பயணம்

'கொலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம், 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் கதாநாயகி என்றாலும் விஜய்யின் 'கோட்' படக் கதாநாயகி என்றால்தான் மீனாட்சி சவுத்ரி பற்றி ரசிகர்களுக்குத் தெரியும். அப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எவ்வளவு காத்திருக்கிறார்களோ, அதுபோலத்தான் மீனாட்சியும் காத்திருப்பார். அப்படத்திற்குப் பிறகுதான் அவர் இன்னும் பிரபலமாவார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் மீனாட்சி அவரது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சில புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். சில அசத்தலான கிளாமர் புகைப்படங்களும் அதில் … Read more

200 மில்லியன் சாதனைகளைக் கடந்த 'ஹனுமான்'

தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. இப்படம் ஓடிடியில் வெளியான ஒரே நாளிலேயே 100 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தற்போது 200 மில்லியன் பார்வைகளை ஐந்து தினங்களில் கடந்துள்ளது. ஓடிடி தளத்தில் தெலுங்கு, மட்டும்தான் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமான பார்வைகளை ஓடிடி தளத்தில் பெற்றிருக்கலாம். சில … Read more