பாரம்பரிய 'படுகா' திருமணம் : மீதா ரகுநாத் பரவசம்
'முதலும் நீ முடிவும் நீ, குட் நைட்' ஆகிய இரண்டே தமிழ்ப் படங்களிலும் நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீதா ரகுநாத். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இரண்டே இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு இவ்வளவு சீக்கிரத்தில் அவர் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். ஊட்டியைச் சேர்ந்த மீதா தனது பாரம்பரிய திருமணம் பற்றிய பரவசமான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். “ஒரு பாரம்பரியமான படுகா திருமணம் என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. காதலில் … Read more