பிளாஷ்பேக் : இலக்கிய தரம் வாய்ந்த தமிழ் பாடல்களை எழுதிய மலையாளி
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.வல்லபன். ஆனால் அவர் அதிகம் அறியப்படாமல் போனார். காரணம் அடிப்படையில் அவர் ஒரு மலையாளி. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் பெரிஞ்ஞினம் என்ற ஊரில் பிறந்தவர். வல்லபனின் பள்ளிப் பருவத்தில் குடும்பம் சென்னை வந்தது. பள்ளிப் படிப்பு மலையாள வழியிலும் தமிழ் வழியிலும் கழிந்தது, என்றாலும் தமிழில் கவிதைகளும் பாடலும் எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 1979ம் ஆண்டு 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் சுதாகர், சரிதா நடிப்பில் … Read more