மீண்டும் இணையும் ரஞ்சித் – தினேஷ் கூட்டணி

விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பட வேலைகளை முடித்ததும், 45 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித். இதில் அவர் இயக்கிய முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷ் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் காதல் கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், ஒருவேளை இப்படம் அட்டக்கத்தி 2வாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அட்டக்கத்திக்கு பிறகு ரஜினி நடிப்பில் … Read more

'ஹாட் ஸ்பாட்' சென்சார் ஆகாத டிரைலர் : சர்ச்சையில் முடிந்த சந்திப்பு

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையசரன், சாண்டி, ஆதித்யா, சோபியா, ஜனனி, கவுரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'. இப்படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் உள்ள ஒரு தலைப்புதான். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதில் பல கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வசனங்கள், காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. யு டியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு, டிரைலர்களுக்கு சென்சார் தேவையில்லை. அதனால், சினிமா டிரைலர்கள் சிலவற்றை பரபரப்பு ஏற்படுத்துவதற்காகவே … Read more

இளையராஜா படத்தில் இணையும் திரைப்பிரபலங்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ‛இளையராஜா' என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் நீண்டகால நண்பர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இளையராஜாவிடத்தில் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் இசையமைத்த பல படங்களுக்கு … Read more

கிரியேட்டிவ் தயாரிப்பாளரான சவுந்தர்யா ரஜினி

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. அடிப்படையில் கிராபிக்ஸ் டிசைனரான இவர், ‛படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவகாசி, மஜா, சண்டக்கோழி' உள்ளிட்ட பல படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். கோச்டையான், வேலையில்லா பட்டதாரி படங்களை இயக்கினார். கோவா படத்தை தயாரித்தார். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சவுந்தர்யா தற்போது மீண்டும் வந்திருக்கிறார். இந்த முறை அவர் கால் பதித்திருப்பது வெப் தொடரில். 'கேங்ஸ்: குருதி புனல்' என்ற தொடரில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இந்த … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இப்போது அதை நிறைவேற்றி உள்ளார். படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், … Read more

இளம் ராஜாவாக மாறிய தனுஷ்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'இளையராஜா' படத்தின் பணிகள் தொடங்கி விட்டது. 'கேப்டன் மில்லர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. காரணம் அவரின் முந்தைய படங்கள். வசந்த் ரவி நடித்த 'ராக்கி', செல்வராகவன் நடித்த … Read more

'சிங்கம் 4' பற்றி காலம் தான் பதில் சொல்லும் : ஹரி விரக்தி

இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் வெளியான 'சிங்கம்' படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்றை 3வது பாகம் பெறவில்லை. இதனால் அதன் நான்காம் பாக கதை தயாராக இருந்தும் சூர்யா நடிக்காமல் ஒதுங்கினார். ஹரி, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிங்கம் 4 கைவிடப்பட்டது. இதுகுறித்து ஹரி கூறியிருப்பதாவது: நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றித்தான் கேட்கிறார்கள். சிங்கம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த படம். அதனால் … Read more

கோலாகலமாக நடந்த ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. சீரியல்களை தாண்டி சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு அசோக் என்பவருடன் திருமணமாகி சித்தாரா என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஸ்ரீதேவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு தற்போது கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. அதில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ருதிராஜ் அதன் வீடியோவை இண்ஸ்டாகிராமில் … Read more

மிர்னா மேனன் வொர்க் அவுட் வீடியோ வைரல்

கேரளாவை சேர்ந்த நடிகை மிர்னா மேனன் தமிழில் ஏற்கனவே சில படங்களில் அறிமுகமாகி நடித்துள்ளார். இருந்தாலும், சென்ற வருடம் வெளியான ஜெயிலர் படம் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது. தற்போது தமிழ் திரையுலகில் தீவிரமாக வாய்ப்பு தேடும் மிர்னா மேனன் பிட்னஸுக்காக பயங்கரமாக வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வகையில் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி என்கிற கடுமையான பயிற்சியை மேற்கொள்ளும் அவர் அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு … Read more

காட்டிலாகா அதிகாரியாக நடிக்கும் சுனைனா

நிலா நிலா ஓடிவா, சாதரங்கம், பிங்கர் பிரிண்ட்ஸ், மீட் கியூட் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ள சுனைனா தற்போது நடித்துள்ள தொடர் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. இதில் அவர் காட்டிலாகா அதிகாரி 'காத்தி' என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதையின் நாயகனாக அதாவது இன்ஸ்பெக்டர் ரிஷியாக நவீன் சந்திரா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் வருகிற 29ம் தேதி … Read more