பிறந்தநாளன்று மகாலெட்சுமி செய்த உருக்கமான காரியம்

சின்னத்திரை நடிகை மகாலெட்சுமி, சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாக்களில் இருவரும் கவனம் ஈர்த்து வைரல் ஜோடியாக டிரெண்டாகி வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள மகாலெட்சுமி மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாய் தனது உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரம்பி உள்ளது. முதலில் எனது கணவர் நள்ளிரவில் … Read more

'இனிமேல்' – அப்பா கமல்ஹாசன் தயாரிப்பில், மகள் ஸ்ருதிஹாசனின் தாராளக் கவர்ச்சி

சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களின் நேற்றைய அதிர்ச்சியாக 'இனிமேல்' என்ற ஆல்பத்தின் வீடியோ முன்னோட்டம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிக்க, கமல்ஹாசன் பாடலை எழுத, இசையமைத்து, கருத்தாக்கம் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனின் தாராள கவர்ச்சி ஒரு அதிர்ச்சி என்றால் மற்றொரு அதிர்ச்சியாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதும் அமைந்துள்ளது. இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் என எந்தப் பக்கம் போனாலும் இளம் ரசிகர்கள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பேச வேண்டும் என்பதால் … Read more

சோஷியல் மீடியாவில் இருந்து விலகுகிறேன் : பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அதன்பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த அவர் காதல் கணவருக்காக நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா கணவரை விட்டு பிரிந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்செட்டான பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் … Read more

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி உரிமை, இவ்வளவு விலையா ?

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் உள்ள இப்படம் எப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் என்பதே இத் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள். இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் … Read more

தனது வாழ்க்கை வரலாற்று படம் : இளையராஜா நெகிழ்ச்சி பதிவு

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். நேற்று இந்த படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டனர். படத்தின் அறிமுக விழாவிலும் கமல், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனது வாழ்க்கை படம் பற்றி இளையராஜா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “ஆரம்பத்தில், இது எனது … Read more

பைக் ட்ரிப்பில் கமகம பிரியாணி சமைத்த அஜித்குமார்

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் இதையடுத்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கப் போகிறார். சினிமா தவிர பைக் ரைடிங் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் அஜித், தனது ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பைக் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஓய்வு இடைவெளியில் தன்னுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ஆரவ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பைக் ட்ரிப் செய்து வருகிறார் அஜித். … Read more

யோகிபாபு படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர்

நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் பெரிய நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் இன்னொரு பக்கம் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகும் இந்த படம் சபரிமலையை பின்னணியாக கொண்டு உருவாகி … Read more

அருந்ததி நாயரின் மருத்துவ செலவுகளுக்கு உதவி கோரும் குடும்பத்தினர்

தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி … Read more

மும்பையில் தமன்னா – சமந்தா சந்திப்பு

குஷி படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட படப்பிடிப்புகளுக்கு ஒரு வருட இடைவெளி கொடுத்த நடிகை சமந்தா, வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் மற்றும் உள்நாட்டுக்குள் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் என தான் விரும்பியபடி பொழுதைப் போக்கி வருகிறார். இந்த நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸ் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. ராஜ் மற்றும் டி கே இணைந்து இயக்கும் இந்த வெப் சீரிஸ் மட்டுமல்லாது அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கும் பல தயாரிப்புகளின் அறிமுக … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த மோகன்லால்

நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. … Read more