மோகன்லாலின் 360-வது படத்தை இயக்கும் 'ஆபரேஷன் ஜாவா' இயக்குனர்
மோகன்லால் தற்போது ஒரு பக்கம் சீனியர் மற்றும் பிரபலமான இயக்குனர்களுடன் பணியாற்றிக் கொண்டே இன்னொரு பக்கம் கவனம் ஈர்க்கும் இளம் இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி டைரக்ஷனில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இன்னொரு பக்கம் தற்போது நடிகர் பிரித்விராஜின் டைரக்ஷனில் 'லூசிபர் 2 – எம்பிரான்', பிரபல இயக்குனர் ஜோஷி டைரக்சனில் 'ரம்பான்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். … Read more