சூது கவ்வும் 2ம் பாகம் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

கடந்த 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன படம் 'சூது கவ்வும்'. இதில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன்,பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். தற்போது சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த பாகத்தை எம் எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இவர் இயக்கிய முதல் படமான 'யங் மங் சங்' இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கின்றார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, … Read more

பப்லுவை பிரிந்தது குறித்து ஷீத்தல் விளக்கம்

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து … Read more

தோனியுடன் புகைப்படம் எடுத்த ரேவதி பாட்டி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்திலிருந்தே சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பழம்பெரும் நடிகை ரேவதி. தற்போது சின்னத்திரை சீரியல்களில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேவதி, முன்னதாக மெளன ராகம் தொடரில் நடித்திருந்தார். மிக சமீபத்தில் விஜய் டிவியில் ஹிட் அடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரிலும் முத்துவின் பாட்டியாக கலக்கி வருகிறார். கிரிக்கெட் ரசிகையான இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். தோனியை … Read more

பிரான்ஸ் நாட்டிலும் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 3 படம்

கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் '3'. அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் '3' படம் ரீ-ரிலீஸ் ஆனது ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர். கடந்த வாரத்தில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் 3 படம் ரீ ரிலீஸ்க்கு ரசிகர்கள் பேராதரவு தருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ் … Read more

வசந்த் ரவிக்கு ஆதரவு தந்த விஷ்ணு விஷால்

பிரியா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், வசந்த் ரவி, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல், தனியார் சாட்டிலைட் டிவி ஒன்றில் பிரிமீயர் படமாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தின் கதாநாயகன்களில் ஒருவரான வசந்த் ரவி இது குறித்து அவரது கண்டனக் கருத்தை பதிவிட்டிருந்தார். அவருக்கும் படக்குழுவுக்கும் ஆதரவு தரும் விதத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒரு பதிவிட்டுள்ளார். … Read more

World War 3 is coming: Putin warns of re-election victory | ஒரு அடி தூரத்தில் 3ம் உலகப் போர்: மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புடின் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில், 87 சதவீத ஓட்டுகளுடன் புடின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிபர் அரியணையில் புடின் ஏறியிருக்கிறார். ஓட்டளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு … Read more