அனுஷ்காவின் மலையாள படத்தில் இணைந்த பிரபுதேவா!

தெலுங்கில் கடந்த ஆண்டு மிஸ் செட்டி மிஸ்டர் பாலிசெட்டி என்ற படத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது மலையாளத்தில் காதனர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அனுஷ்காவாக ஸ்லிம் ஆகி இருக்கிறார். ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா நெகட்டிவ் ரோலில் நடிக்க, மலையாள நடிகர் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவும் இந்த காதனர் படத்தில் இணைந்துள்ளார். இந்த … Read more

துப்பறிவாளன்- 2 லொகேஷன் பார்க்க லண்டன் செல்லும் விஷால்! மே மாதம் படப்பிடிப்பு!!

தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ … Read more

அரசியலை விட்டு விலகியது ஏன்? மனம் திறந்தார் நடிகர் பாக்யராஜ்

கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா அரங்கில், தி.மு.க., மாநில வர்த்தக அணி சார்பில், கலை இலக்கிய நாடக திருவிழா நேற்று நடந்தது. விழாவில், சினிமா இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்களில் பாட்டு இருக்கும், சண்டை இருக்கும். ஆனால், அதற்கும் மீறி கதை, வசனம், இசை, எடிட்டிங் என எல்லாம் அவருக்கு தெரியும். அவரது திறமைக்கு இணையாக, கருணாநிதியின் பேனாவை வைத்தாலே போதும். அரசியலில் இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தொழிலை பாதித்தது; படம் … Read more

Trumps obsession with campaigning is bloodshed if I lose | நான் தோற்றால் ரத்தக்களரி தான் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ”அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை எனில், நாடே ரத்தக்களரியாக மாறும்,” என, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து, குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், ஒஹியோ மாகாணத்தில் உள்ள வாண்டாலியாவில், டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நவம்பர் 5ம் தேதியை மறந்துவிடாதீர்கள். நம் நாட்டின் வரலாற்றில் மிக … Read more

தனுஷ் உடன் இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அமரன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆனாலும், தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தனுஷை சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படம் வெளியான பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறதா அமரன் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து இப்போது இதன் … Read more

தேர்தல் தேதி அறிவிப்பால் 'கல்கி 2898 எடி' ரிலீஸுக்கு சிக்கல்

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் , திஷா பதானி ஆகியோருடன் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'கல்கி 2898 எடி'. இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என ஜனவரி 12ம் தேதியே அறிவித்துவிட்டார்கள். ஆனால், அத்தேதியில் படம் வெளிவருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களின் பார்லிமென்ட் தேர்தல் மே 13ம் தேதியன்றும், ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே தேதியில் நடக்கும் … Read more

மஞ்சும்மேல் பாய்ஸ் – தமிழகத்திலும் புதிய சாதனை

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் 22ம் தேதி வெளியான படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் முதன் முதலில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்தது. அதன்பின் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் … Read more

FIR Against Chhattisgarh Ex Chief Minister Bhupesh Baghel In Mahadev Betting App Case | மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: சத்தீஸ்கர் முன்னாள் காங்., முதல்வர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராய்ப்பூர் : மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி விவகாரம் அங்கு பெரும் புயலை கிளப்பியது. அதில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில் நடந்த பண மோசடி … Read more

தேர்தல் 2024, தமிழ்ப் புத்தாண்டுக்கு புதிய படங்கள் வராது ?

18வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. 7 கட்டமாக நடக்க உள்ள தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ் சினிமா வெளியீட்டுத் தேதிகளில் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டு நாள் முக்கியமான வெளியீட்டு நாள். பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகும் காலகட்டம். … Read more