ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் போட்டி தொடரை நடத்திய இந்தியா முழு அளவில் வெற்றி பெற்றது. இதனால், ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு அமைந்தது.  இந்த தொடரில், சூரியகுமார் அதிகளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு அடுத்து வெங்கடேஷ் 2வது இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பேட்டிங் தரவரிசையில், 35வது இடத்தில் இருந்து 21வது … Read more

“ஜெர்மனியின் நாஜி படையைப் ரஷியா தாக்குதல் நடத்துகிறது” – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகள் தாக்கியது போல் உக்ரைன் மீது ரஷ்யா … Read more

பண மோசடி வழக்கில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கைது

மும்பை, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மந்திரி  நவாப் மாலிக் , சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.  இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை … Read more

சூர்யகுமார் யாதவ், தீபக் சாகர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகல்

லக்னோ: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதல் 20 … Read more

உலகம் தற்போது அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளது – ஐ.நா.தலைவர்

ஜெனீவா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா அங்கீகரித்தது.  இதனை தொடர்ந்து … Read more

ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல – கோர்ட்டு தீர்ப்பு

மும்பை மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில்  ஒருவரிடம் … Read more

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.  இந்நிலையில் மேக்னஸ் கார்ல்சனை … Read more

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் "சுதந்திர நிலைப்பாட்டை" வரவேற்கிறோம் – ரஷ்யா

புதுடெல்லி, உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் … Read more

உத்தரபிரதேச தேர்தல்; 200 துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார் மந்திரி அஜய் மிஸ்ரா!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்த நிலையில்,உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதராபாத் – கேரளா அணிகள் இன்று மோதல்

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் – கேரளா அணிகள் மோதுகின்றன  ஹைதராபாத் அணி விளையாடிய 17 போட்டிகளில் 9 வெற்றி ,5 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது … Read more