உக்ரைன் விவகாரம்:ரஷிய நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை- புதின் பிடிவாதம்

மாஸ்கோ:  கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் … Read more

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மனுக்கள்- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, முந்தைய அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் … Read more

முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்

லக்னோ, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது .இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான  டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் சில கும்பல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காத்மண்டு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலியாக நிறுவனங்களை பதிந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு இடங்களில் மொத்தம் 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் … Read more

முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர், “வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக … Read more

புரோ கபடி : அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் , பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.  இந்த நிலையில், இன்று  நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தபாங் … Read more

27 வயது மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்த 50 வயது எலான் மாஸ்க்…!

சிட்னி, உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான  எலான் மஸ்க்கிற்கு  தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற  நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கு: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல்

சிவமொக்கா, கர்நாடகா மநிலம் சிவமொக்காவில் பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, ஹிஜாப் விவகாரம் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த கொலை வழக்கில் விசாரணை நடப்பதாக கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.  மேலும் உள்துறை மந்திரி  அரக ஞானேந்திரா கூறுகையில்,  ஹிஜாப் சர்ச்சைக்கு பின்புலத்தில் உள்ள அமைப்புகளுக்கு இந்த கொலையில் தொடர்பு … Read more

கேட்சை தவறவிட்டதால், சக வீரரின் கன்னத்தில் அறைந்த பாகிஸ்தான் வீரர்

கராச்சி, பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் லாகூர் குலாண்டர்ஸ் அணி வீரர் கம்ரான் குலாம், ஒர் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், சக வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஹாரிஸ் ரவுப் அவரின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் கம்ரன் குலாம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கம்ரான் குலாம் ரன் அவுட் மூலம் வஹாப் ரியாசை வெளியேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ஹாரிஸ் … Read more

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது – இங்கிலாந்து மந்திரி

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது.  இதனை … Read more