ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு

ஹாமில்டன், ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.  இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  இந்த போட்டியில், இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு பதிலாக யாஸ்திகா பாட்டியா அணியில் சேர்க்கப்பட்டு அவர் விளையாடுகிறார்.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதில் பிரச்சினை – கமலா ஹாரிஸ் போலாந்து விரைவு

வார்சா, உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.  இதற்கிடையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு நாடுகள் வழங்கும் போர் விமானங்களுக்கு அதே அம்சங்களை கொண்ட புதிய போர் விமானத்தை அமெரிக்கா வழங்க முன்வந்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனுக்கு … Read more

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். புல்வாமாவின் நைனா பேட்புரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென … Read more

சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: தெண்டுல்கர் வரவேற்பு..!

லண்டன்,  சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பணிகளை லண்டனில் செயல்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) கவனிக்கிறது. இந்த கிளப் உருவாக்கும் விதிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி அமல்படுத்துகிறது.  இந்த நிலையில் தற்போதைய கிரிக்கெட் விதிமுறைகளில் சில திருத்தங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- * எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன், பந்து வீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறும் போது பவுலர் … Read more

2வதும் பெண் குழந்தை; ஆத்திரத்தில் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப்.  இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.  இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது.  ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை கொடூர தந்தை ஷாஜீப் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றுள்ளார்.  இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  அந்த பெண் குழந்தையின் … Read more

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம்; சட்டசபையில் மந்திரி சர்ச்சை பேச்சு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மாநில நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி தாரிவால் பேசும்போது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம்.  அதில், சந்தேகம் இல்லை.  ஏன் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முன்னிலையில் உள்ளோம்? என கேள்வி எழுப்பி நிறுத்திய அவர், ஏனெனில், ராஜஸ்தான் ஆண்கள் அதிகம் உள்ள மாநிலம் என கூறினார்.  இதனால், சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவரது இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது.  இதுபற்றி ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் … Read more

பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருது பட்டியலில் ஸ்ரேயாஸ், மிதாலி ராஜ்..!!

துபாய்,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன் விருத்தியா அரவிந்த், நேபாள அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் … Read more

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,265 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  இவற்றில், அமெரிக்கா அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.  அந்நாட்டில் 39,200 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.10 கோடியாக உயர்வு அடைந்து உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,265 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பிரான்சில் 69,190 பேரும், இங்கிலாந்தில் 67,159 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனையடுத்து பிரேசிலில் 49,078 பேருக்கு … Read more

இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே பதிவாகிறது.   கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியாவில் ஒரே நாளில் 4,575 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இது நேற்றைய பாதிப்பான 3,993 ஐ விட சற்று அதிகரித்துள்ளது.    ஒருநாள் கொரோனா நேற்று 3,993 ஆக இருந்த நிலையில் இன்று 4,575 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,71,308 லிருந்து 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது. … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பெர்லின், ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார்.  47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில், லக்‌ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி … Read more