ஒடிசா: காட்டு யானையிடம் இருந்து கிராம மக்களை காப்பாற்றிய வனக்காவலர் குவியும் பாராட்டு…!

ஒடிசா, ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று  ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது. அப்போது வனக் காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த இடத்தை அடைந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தார், அவருடன் இருந்த அனைவரும் ஓடிவிட்டாலும், ரஞ்சன் தனி ஒரு ஆளாக நின்று, யானையை விரட்டுவதில் மட்டும் கவனம் … Read more

ஐசிசி டி20 தரவரிசை: 6 ஆண்டுக்கு பிறகு “முதல் இடத்தில்” இந்தியா…!!

துபாய்,  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9-வது வெற்றி இதுவாகும். முன்னதாக ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் … Read more

ராசல் கைமா ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியில் பழங்கால கார்களின் அணிவகுப்பு

ராசல் கைமா,  அமீரகத்தில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் அந்த கார்கள், ராசல் கைமாவில் உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி வழியாக வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பழங்கால கார்களின் அணிவகுப்பு இத்தாலி நாட்டில் பிரபலமான ‘1,000 மிக்லியா’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பழங்கால கார்கள் சேகரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தாலியில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் 1,600 கி.மீ தொலைவுக்கு பிரசியா … Read more

இளம் தலைமுறையை மேம்படுத்தினால் இந்தியாவின் எதிர்காலம் மேம்பாடு அடையும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி,  மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து  இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:- நமது இளம் தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம் தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும். 2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  *முதலாவதாக, தரமான … Read more

சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விர்தி குமாரிக்கு பாராட்டு விழா!

சென்னை, அபுதாபியில் சமீபத்தில் நடந்த ‘கலப்பு மார்சியல் ஆர்ட்ஸ்’ என்ற சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் இந்திய வீராங்கனை விர்தி குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.  அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார். விர்தி குமாரியை வாழ்த்தி பேசிய கனிமொழி கூறியதாவது, “விர்தி குமாரி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று வாழ்த்தினார். … Read more

விற்பனையில் களைகட்டும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாசனை திரவியம்..!

இதாகோ, அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் (French Fries) நறுமணம் கொண்ட வாசனை திரவியம் (Perfume) ஒன்றை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் உள்ள ‘தி இதாகோ பொட்டேட்டோ கமிஷன்’ என்ற நிறுவனம் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அந்த நிறுவனம், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளதாக … Read more

உ.பி: ருசிகரம்; மாறி மாறி காலில் விழுந்து மரியாதை – இணையத்தில் வைரலாகும் வீடியோ

உன்னவ், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி உ.பி-யில் பேரணிக்கு வந்தபோது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர். பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, ​​பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் … Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு..!

பீஜிங்,  24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடந்த 15 வகையான விளையாட்டு போட்டிகளில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒரே வீரரான பனிச்சறுக்கு வீரர் ஆரிப்கான் இரு பந்தயத்திலும் ஏமாற்றம் அளித்தார். போட்டியின் கடைசி நாளான நேற்று ஐஸ் ஆக்கியில் பின்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ரஷியாவை … Read more

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்தது!

வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். … Read more

62 வயதான மூதாட்டியின் துணிச்சலான மலையேற்ற சாகசம்!

பெங்களூர், பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் மலையேற்றம் செய்துள்ளார்.  விஷ்ணு என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில்,  பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான நாகரத்னம்மா என்ற வயதான மூதாட்டி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகஸ்திய கூடம் எனப்படும் சிகரத்தின் உச்சியில் சேலை அணிந்தபடி ஒரு கயிற்றின் உதவியுடன் சிகரத்தில் ஏறுகிறார்.  சக்யாத்ரி மலைத்தொடரில் உள்ள உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்று அகஸ்திய கூடம் … Read more