இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

இந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 279 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மேகனா (61 ரன்), ஷபாலி வர்மா (51 ரன்), தீப்தி ஷர்மா (69 ரன்) ஆகிேயாா் அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் (23 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (19 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி … Read more

ஒமைக்ரான் பிஏ.2 உருமாற்றம் டெல்டா வைரசை விட ஆபத்தானதா.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

டோக்கியோ, ஒமைக்ரான் வைரசின் பிஏ.2 உருமாற்றம் அதன் முந்தைய மரபணு மாற்றமான பிஏ.1ஐ விட அதி வேகமாக பரவும், தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ.2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒமைக்ரானில் இதுவரை … Read more

உ.வே.சா, சத்ரபதி சிவாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு..!

புதுடெல்லி, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர், ‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி

பனாஜி, கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) – பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிா்ச்சி தோல்வி அளித்தது.நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் … Read more

கனடாவில் தொடரும் அட்டூழியம்! எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இதனால் அந்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி … Read more

நடிகை சன்னிலியோனின் பான் எண் மூலம் கடன் பெற்று மோசடி

புது டெல்லி, தானி கடன்கள் மற்றும் சேவைகள் என்னும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் தனிநபர் கடன் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வழங்கி வருகிறது. மேலும் இதில் கடன் பெற பான் கார்டு மற்றும் முகவரி சான்று மூலம் உடனடியாக பணம் பெறலாம் என தனது விளம்பரத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் சில மோசடிகாரர்கள் நடிகை சன்னிலியோன் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெளியேற்றம்

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஒற்றையர் பிரிவில் வெற்றி கண்டனர்.  கிரண் ஜார்ஜ் (ஒற்றையர்), ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார், மஞ்சித் கவாய்ராக்பாம்- கோந்துஜாம் (இரட்டையர் … Read more

பெண்களுக்கான நீச்சல் போட்டி: ஆதிக்கம் செலுத்திய மூன்றாம் பாலினத்தவர்கள்

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் 2022 இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இந்நிலையில், பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர்களான (திருநங்கைகள்) ஐசக் ஹிங்க் மற்றும் லியா தாமஸ் ஆகிய இருவரும் பெண்களுக்கான இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆணாக பிறந்த லியா தாமஸ் 2019-ம் ஆண்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். … Read more

குஜராத்: விற்பனையில் களைகட்டும் 'புஷ்பா' டிசைன் சேலை..!

காந்தி நகர், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த … Read more

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வெற்றி தொடருகிறது

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. முதல் 3 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட ஆஸ்திரேலிய அணி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளை … Read more