இந்த ஆண்டின் பெஸ்ட் முதல் நாள் வசூல் படங்களின் பட்டியல்.. ரஜினி, கமல், அஜித், விஜய் யார் படம் டாப்?

சென்னை : கடந்த ஆண்டில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அதிகமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சிறப்பான எதிர்பார்ப்பை கொடுத்த படங்கள் சொதப்பியதும், எதிர்பார்க்காத படங்கள் சூப்பர் ஹிட்டானதும் இந்த ஆண்டில் நடைபெற்றது. சிறப்பான படங்கள் கோலிவுட்டில் சிறப்பான படங்கள் வாரந்தோறும் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளிலும் ஓடிடியிலும் மாறி மாறி படங்கள் ரிலீசாகி ரசிகர்களை சிறப்பான என்டர்டெயின் செய்து … Read more

குக் வித் கோமாளி புகழ் திருமணத்தில்.. கையை பிடித்துக் கொண்டு விடாத சசிகுமார்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். அதன் பின்னர் காமெடி நடிகராக வலிமை, எதற்கும் துணிந்தவன், சபாபதி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், புகழுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவுக்கும் இன்று எளிமையான முறையில் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். காதலியை கரம்பிடித்த புகழ் காமெடி நடிகராக வலம் … Read more

டைட்டானிக் ஹீரோ இளம் ஹாலிவுட் நடிகை இடையேயான காதல் முடிவுக்கு வந்தது: வயசு வித்தியாசம் தான் காரணமா?

அமெரிக்கா: டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 47 வயதான லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 25 வயது இளம் ஹாலிவுட் நடிகையான கமிலா மோரோனுடன் டேட்டிங் செய்து வந்தார். இந்நிலையில், இருவரும் அவர்களது உறவு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டைட்டானிக் ஜாக் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. பிரம்மாண்டமான கப்பலை பின்னணியாகக் கொண்டு உலகமகா காதல் காவியமாக … Read more

அம்மான்னா சும்மா இல்லடா.. விநாயகர் சதுர்த்தியில் மீண்டும் நிரூபித்த ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய சினிமா கேரியரில் 2 படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் திரைக்கதைக்காக பாராட்டுக்களை பெற்றன. இந்நிலையில் நடிகர் தனுஷுடன் தன்னுடைய 18 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதையடுத்து இவரது வாழ்க்கையில் பல ரொட்டீன்கள் மாறியுள்ளன. தன்னுடைய உடல்நலன், மனநலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா … Read more

PVR தியேட்டரில் பச்சைக் குதிரை விளையாடிய ரசிகர்கள்.. நெக்ஸ்ட் டைம் பாயோட வந்துடுவாங்க போல!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய மல்டி பிளக்ஸ் நிறுவனமான PVRல் எப்போதுமே 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகவே படம் போடுவது வாடிக்கை. அதுவே ஏகப்பட்ட ரசிகர்களை கடுப்பாக்கி வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி அதுவுமா தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்து விட்டனர். அதன் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்குள் செய்த அலப்பறை வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. பிவிஆரில் பச்சைக் குதிரை சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ரசிகர்கள் … Read more

தேவையற்ற கருத்துகளை யூடியூபில் பேசுவது ஃபேஷனாகிவிட்டது: கனல் கண்ணன் விவகாரத்தில் நீதிபதி கருத்து

சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனு கொடுத்திருந்தார். இந்த வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் சிலையை உடைப்பேன் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்த கனல் கண்ணன், தற்போது அரசியல் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், … Read more

திரையரங்குகளில் புறக்கணிக்கப்படுகிறதா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: புலம்பும் ரசிகர்கள்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முயற்சியில் நட்சத்திரம் நகர்கிறது அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தரமான படங்களை கொடுத்துள்ள பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், காளிதாஸ் … Read more

ரஷ்ய சர்வதேச திரைப்பட விழாவில் புஷ்பா: ஹாலிவுட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்

மாஸ்கோ: தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், புஷ்பா படத்திற்கு சர்வதே அளவில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிரட்டிய புஷ்பாகாரு டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்சன் ஜானரில் பான் இந்தியா படமாக வெளியான … Read more

ஹாலிவுட் படத்தின் காப்பியா கோப்ரா.. இணைத்தில் வெளியான வீடியோ!

சென்னை : நேற்றைய தினம் கோப்ரா படம் விக்ரம், ஸ்ரீநிதி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என சிறப்பான படங்களை சிறப்பான கதைக்களத்துடன் கொடுத்து நல்ல பேன் பேசை உருவாக்கி வைத்திருந்த அஜய் ஞானமுத்து தற்போது இந்தப் படத்தின்மூலம் சொதப்பியுள்ளதாக விமர்சனங்களை பெற்றுள்ளார். நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் என்ற மகா நடிகர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு … Read more

புதிய முடிவோடு சினிமாவுக்கே திரும்பி வரும் ரம்யா: எல்லாமே அதுக்காகத்தானாம்

பெங்களூரு: தென்னிந்திய திரையுலகில் ரொம்பவே பிரபலமானவர் நடிகை ரம்யா. முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா, அரசியலிலும் காங்கிரஸ் எம்பியாக பெரிய ரவுண்டு வந்தார். இந்நிலையில், நடிகை ரம்யா மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் அறிமுகம் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ‘அபி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கன்னடத்தில் ஆகாஷ், கௌரம்மா, ஜோதே ஜோதியாளி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் … Read more