ரஜினி உடல்நலம் சிறப்பாக இருக்கு.. தியேட்டரில் வேட்டையன் படம் பார்க்க வந்த லதா ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் சிறப்பு காட்சியுடன் தமிழகத்திலும் வெளியான நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த்,