அட விஜய்யோட தளபதி 69 படத்துல இவரும் இருக்காரா.. கூட்டணி பலமாயிட்டே இருக்கே!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அடுத்தடுத்த நடிகர், நடிகைகளை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த இரு தினங்களாக அறிவித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடிகர்கள், நடிகைகளை அறிவிக்கும் வேலை தொடர்ந்து வருகிறது. தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளார் அனிருத்.