கழிவறையில் விழுந்து நடிகர் மர்ம மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்.. நடந்தது என்ன?

சென்னை : பிரபல சீரியல் நடிகர் கழிவறையில் விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மட்டுமின்றி, பிரபல மாடலாகவும், காஸ்டிங் ஒருங்கிணைப் பாளராகவும் பலரது கவனத்தை ஈர்த்து வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத். வளர்ந்து வரும் நடிகரான இவர் சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம். ஆதித்யா சிங் ராஜ் : தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Splits Villa சீசன் 9 கலந்து கொண்டு பிரபலமானவர் ஆதித்யா சிங் ராஜ்புத். மாடலான இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

Sarath babu : காற்றில் கலந்தார் எதார்த்த நாயகன்… சரத்பாபுவின் உடல்தகனம்.. கதறி அழுத குடும்பத்தினர்!

சென்னை : நடிகர் சரத்பாபுவின் உடல் கிண்டி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சரத்பாபு காலமானார் : 72 வயதான நடிகர் சரத்பாபு 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிறந்தது என்னவோ ஆந்திராவாக இருந்தாலும், இவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரின் அளவான பேச்சு எதார்த்தமான … Read more

Rajinikanth: எனக்கு எதுக்கு குடை.. மடக்கு.. சரத்பாபு மறைவால் வாடிய ரஜினி.. ரொம்ப அப்செட்

சென்னை: நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனக்கு குடை பிடிக்க வேண்டாம் என உதவியாளரிடம் கூறிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மே 22ம் தேதி காலமானார். சற்று முன் அவரது உடல் கிண்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. சினிமாவுக்கு வருவதற்கு முன்பில் இருந்தே சரத்பாபுவும் நானும் நண்பர்கள் என ரஜினிகாந்த் பேசினார். சரத்பாபுவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி: … Read more

Vijay 68 – கஸ்டடி தோல்வி.. இருந்து வெங்கட் பிரபுவை விஜய் டிக் செய்ய என்ன காரணம்?

சென்னை: Vijay 68 (விஜய் 68) கஸ்டடி என்ற தோல்வி படத்தை கொடுத்தாலும் தனது அடுத்த பட இயக்குநராக வெங்கட் பிரபுவை விஜய் ஏன் ஓகே செய்தார் என்பது குறித்த காரணம் தெரியவந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீரில் முதல் ஷெட்யூல் முடிந்ததை அடுத்து சென்னையில் தற்போது ஷூட்டிங் நடந்துவருகிறது. ஜூன் மாதத்திற்குள் ஷூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என லோகேஷ் கருதுவதால் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு … Read more

Sarath Babu: கருப்பு சட்டை.. கலங்கிய கண்கள்.. நண்பர் சரத்பாபுவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

சென்னை: சரத்பாபுவின் உடல் சென்னை திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், காலையிலேயே தனது நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலங்கிய கண்களுடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்தை அறைந்ததற்காக நாசர் பல ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், முத்து படத்தில் சரத்பாபு ரஜினியை அடித்த போது அந்த காட்சியை பார்த்து எந்தவொரு ரசிகரும் சரத்பாபுவை திட்டவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவரும் அப்படிப்பட்ட நண்பர்கள் … Read more

Sarath Babu: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சரத்பாபு உடல்.. கடைசியாக நண்பனை சந்திப்பாரா ரஜினி?

சென்னை: ஹைதராபாத் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மே 22ம் தேதி சிகிச்சை பலனின்றி மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து பிரபலமானவர் சரத்பாபு. ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள திநகரில் இருக்கும் சரத்பாபுவின் இல்லத்துக்கு அவரது உடல் சற்று முன்னர் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சரத்பாபு காலமானார்: 1951ம் ஆண்டு … Read more

RRR Actor Ray Stevenson : ஆர்ஆர்ஆர் பட நடிகர் திடீரென உயிரிழந்தார்.. மரணத்திற்கு காரணம் தெரியவில்லை!

சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58. இவர் வார் சோன், தி தியரி ஆஃப் ஃப்ளைட் மற்றும் எச்பிஓ படங்களிலும், தொலைக்காட்சித் தொடரான ரோம் ஆகியவற்றிலும் நடித்து பிரபலமானார். இவரது மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆர்ஆர்ஆர் : எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்ஆர்ஆர்). இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்,அஜய்தேவ்கன்,ஆலியாபட்,ஸ்ரேயா சமுத்திரக்கனி என பலர் … Read more

Captain Miller : அடுத்தடுத்து சிக்கலுக்குள்ளாகும் 'கேப்டன் மில்லர்'… படப்பிடிப்பு நிறுத்தப்படுமா?

சென்னை : தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் குண்டுவெடிப்பு காட்சிகள் அனுமதி பெறாமல் படமாக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் … Read more

“நதியை தேடிவந்த கடல்’’ ஜெயலலிதாவின் கடைசி பட ஹீரோ… சரத்பாபு காலமானார்!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக நடித்த படத்தில் சரத்பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்த சரத்பாபு இன்று காலமானார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு : தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினத்தில் பிரவேசம் தான். இப்படத்தின் போது தான் பாலச்சந்தர் சத்யம் பாபுவுக்கு … Read more

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது!!!

திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது. “அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, … Read more