Lokesh Kanagaraj – கமல் ஃபார்முலாவை லியோவில் ஃபாலோ செய்யும் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படத்தில் கமல் ஹாசன் பட ஃபார்முலாவை லோகேஷ் கனகராஜ் ஃபாலோ செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் … Read more

Vijay Vishal: விஷயம் மார்க் ஆண்டனி டீசர் இல்லை… விஜய்யை விஷால் சந்தித்ததன் பின்னணி!

சென்னை: கோலிவுட்டில் இன்றைய பரபரப்பான சம்பவமே முன்னணி நடிகர்கள் விஜய் – விஷால் சந்திப்பு தான். விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இந்த டீசரை விஜய்யை வைத்து வெளியிடவே விஷாலும் மார்க் ஆண்டனி படக்குழுவும் நேரில் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஷால் இன்னொரு திட்டத்துடன் இந்த சந்திப்பை அரங்கேற்றியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் – விஷால் சந்திப்பின் பின்னணி:விஜய் தற்போது லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் உள்ள … Read more

Kiran: நல்ல பொண்ணுங்கலாம் வரலாறு படைக்க மாட்டாங்களாம்.. கிரண் என்ன சொல்றாருன்னு கேளுங்க!

சென்னை: கவர்ச்சி நடிகையாக வலம் வரும் கிரண் லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு அதற்கு விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர், தென்னவன் என பல படங்களில் நடித்த கிரண் செகண்ட் ரவுண்டில் விஷாலின் ஆம்பள உள்ளிட்ட படங்களில் சீனியர் நடிகையாக மாறி விட்டார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாகவும், டாப்லெஸ் மற்றும் நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மட்டுமின்றி சினிமா துறையையும் அதிர … Read more

Avantika :படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ மகள்.. முகம் சுளித்த இணையவாசிகள்!

சென்னை : நடிகை குஷ்பூ பல ஆண்டுகளை கடந்து சிறந்த நாயகியாக, குணசித்திர நடிகையாக, தயாரிப்பாளராக கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தயாரிப்பாளராகவும் மற்றொருவர் நடிகையாகவும் திரைத்துறையில் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குஷ்பூ மகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் : நடிகை குஷ்பூ 90களில் மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். இவருக்கு தமிழ்நாட்டில் … Read more

Ponniyin Selvan 1 Recap: பொன்னியின் செல்வன் 2 பார்க்கப் போறீங்களா? அப்போ இதை முதல்ல படியுங்க!

சென்னை: எப்படி விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன்பாக கைதி படத்தை ஒரு முறை பார்த்து விடுங்க என லோகேஷ் கனகராஜ் சொன்னாரோ அதே போல பொன்னியின் செல்வன் 2வை பார்ப்பதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் 1ஐ பார்த்து விடுங்கள் என நடிகர் கார்த்தி ட்வீட் போட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்காக கடந்த சில வாரங்களாக பல நகரங்களில் வித வித காஸ்ட்யூம்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், இந்த படத்தின் பிரம்மாண்டம் அளவுக்கு ப்ரமோஷனில் … Read more

விஜய் படத்தில் நடிக்க முடியாதுன்னு சொன்ன விஷால்.. ஆனால், விஷால் படத்தில் இப்போ விஜய் நடிக்கிறாரா?

சென்னை: நடிகர் விஷால் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் விஜய் ரசிகர்களை பயங்கர குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலிடம் தான் முதலில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், விஷால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் விஜய் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்க் ஆண்டனியை நம்பும் விஷால்: நடிகர் … Read more

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு திடீர் சிக்கல்… சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது… என்னாச்சு?

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்.27) உலகம் முழுவதும் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் சிக்கலில் பொன்னியின் செல்வன் 2 பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. … Read more

Vijay On Suriya – நானும் சூர்யாவும் பேசமாட்டோம் – இயக்குநரிடம் விஜய் சொன்ன சீக்ரெட்

சென்னை: Vijay And Suriya (விஜய் மற்றும் சூர்யா) நானும் சூர்யாவும் பேசமாட்டோம் என விஜய் இயக்குநரிடம் சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதனை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக வலம் வருபவர் விஜய். அவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாள்களில் முடிவடைய இருக்கிறது. அக்டோபர் மாதம் லியோ ரிலீஸாகவிருக்கிறது. வாரிசு கொடுத்த … Read more

Selvaraghavan – உங்களை புதைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை – செல்வராகவனின் இன்றைய தத்துவம்

சென்னை: Selvaraghavan (செல்வராகவன்) இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தனது பதின்ம வயதிலேயே இயக்குநராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமான துள்ளுவதோ இளைமை படத்தில் தனுஷும் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ஒருதரப்பினரிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதுவரை ஒருதலை காதலோ, இருதலை … Read more

Viduthalai ott : திரையில் வராத அந்த காட்சி இருக்குமா..விடுதலை ஓடிடி ரிலீஸ்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சூரி கதாநாயகனாக குமரேசன் என்ற கேரக்டரிலும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விடுதலை மார்ச் மாதம் 31ந் தேதி தியேட்டரில் வெளியான இந்த படதை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக … Read more