அந்த இயக்குநர் விழாவில் பிரைட் நடிகர் முகமே ஃபியூஸ் போயிருந்துச்சாம்.. காரணம் அதுதானா?

சென்னை: தனக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை வாரி வழங்கிய இயக்குநரின் படத்திலேயே நடிக்க முடியாது என அந்த பிரைட் நடிகர் மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இனிமேல் அந்த இயக்குநருடன் பிரைட் நடிகர் கூட்டணியே வைக்க மாட்டார் என்றும் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதே இயலாத காரியம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது போல இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரேஞ்சுக்கு அந்த இயக்குநர் அழைத்ததும் நடிகர் அவரது … Read more

Goodluck Studio :டைரக்டர் ஹரியின் ஸ்டூடியோ.. வேட்டி சட்டையில் கலக்கலாக வந்து துவக்கி வைத்த சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா -இயக்குநர் ஹரி இணைந்து சிங்கம் படங்களின் பாகங்களை வெளியிட்டு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. இவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இணைந்துள்ளனர். ஆனால் புதிய படத்திற்காக இவர்களது கூட்டணி அமையவில்லை. மாறாக இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோவை சூர்யா தற்போது திறந்து வைத்துள்ளார். நடிகர் சூர்யா நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து திரையில் மாயாஜாலங்கள் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த … Read more

Kushboo on Sundar C :சுந்தரோட ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன்.. குஷ்பூ சொன்ன காரணம்!

சென்னை :நடிகை குஷ்பூ தொடர்ந்து தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தமிழில் கமல், ரஜினி, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் குஷ்பூ. பப்ளியான குஷ்பூவிற்கு கோயில் கட்டி அழகு பார்த்தவர்கள் தமிழ் ரசிகர்கள். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயாக மாறியுள்ள குஷ்பூவிற்கு தற்போதும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தயாரிப்பாளர், சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நடிகை என பன்முகம் காட்டி … Read more

மலையாள சினிமாவில் ஆபாச படங்கள்… மம்முட்டி, மோகன்லால் தான் காரணம்… பிரியதர்ஷன் ஃபீலிங்!

கொச்சி: மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள கொரோனா பேப்பர்ஸ் படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா பேப்பர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் பிரியதர்ஷன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் தான் என்ற நிலை இப்போது மாறியுள்ளதாகவும், அதன் காரணம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா பேப்பர்ஸ் … Read more

அது குறித்து த்ரிஷாவிடம் கேட்காதீங்க.. லியோ அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருது விழாவில் லியோ படம் குறித்த ஹாட் அப்டேட்டை வெளிப்படையாக சொன்னது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, சிம்பு, பிரதீப் ரங்கநாதன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரேயா, ராஷி கன்னா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதில் பங்கேற்றனர். நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கிய லோகேஷ் கனகராஜ் … Read more

Manikandan – கடைசி விவசாயி.. அந்த தாத்தாவின் குடும்பத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாரா இயக்குநர் மணிகண்டன்?

சென்னை: Director Manikandan (இயக்குநர் மணிகண்டன்) கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவின் குடும்பத்துடைய தற்போதைய நிலை தெரியவந்திருக்கிறது. காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட அவர் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. களம் அமைத்து கொண்டு விண்ட் மணிகண்டன் 2010ஆம் ஆண்டு விண்ட் என்ற குறும்படத்தை இயக்கினார். அந்தப் படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் ஏகத்துக்கும் புகழவும் … Read more

Ponniyin selvan 2 release date : 10 மில்லியன் வியூசை நெருங்கிய பொன்னியின் செல்வன் ட்ரெயிலர்!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொன்னியின் செல்வன் 2 … Read more

Kiran: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கிரண்.. தீயாக பரவும் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் நடிகை கிரண் அப்படியே டோட்டலாக சேஞ்ச் ஓவராகி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. சமீப காலமாக நடிகைகள் பலரும் திருப்பதிக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கிரணும் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ளார். திருப்பதியில் சுடிதார் அணிந்து கொண்டு செம ஹோம்லியாக நடிகை கிரண் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். … Read more

Vetrimaaran Met Ilayaraja:இளையராஜாவுக்கு நன்றி சொன்ன இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை: Vetrimaaran Met Ilayaraja (இளையராஜாவை சந்தித்த வெற்றிமாறன்) விடுதலை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அவர் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். வெற்றிமாறனின் விடுதலை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையிலிருந்து தீமை எடுத்துக்கொண்டு விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன் இதில் விஜய் சேதுபதி, சூரி … Read more

Nayanthara: அப்போ அது கன்ஃபார்ம் தான் போல.. நயன்தாரா யாரு பக்கத்துல உட்கார்ந்து இருக்காரு பாருங்க!

சென்னை: பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழா நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை ராஷி கன்னா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நடிகர் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அந்த விழாவில் ஒயிட் கலர் சேலையில் தேவதை போல கலந்து கொண்ட நிலையில், அவர் பிரதீப் ரங்கநாதன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகி … Read more