விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 படத்தில் அஜித்துக்கு வில்லன்…. உண்மையை சொன்ன கெளதம் மேனன்

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காங் சென்றுள்ளார். துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘ஏகே 62′ படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஏகே 62 படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து இயக்குநர் கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் தொடங்கும் ஏகே 62 வலிமையைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இந்தக் … Read more

மிரட்டலான பிரமோஷன்கள்.. பொன்னியின் செல்வன் டீம் இப்ப எங்க இருக்காங்க தெரியுமா?

டெல்லி : நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்றுப் படைப்பான இந்தப் படத்தை தன்னுடைய கனவு முயற்சியாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள … Read more

அஜித்தின் துணிவு ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்… விரைவில் ரிலீஸ் அப்டேட்

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61 என்ற தலைப்பில் தொடங்கிய இந்தப் படத்தின் தலைப்பு ‘துணிவு’ என படக்குழு அறிவித்துள்ளது. துணிவு ஷூட்டிங் பாங்காங்கில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. துணிவாக வரும் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்தது. … Read more

திருச்சிற்றம்பலம் நித்யா மேனனின் நடிப்பு ..வசந்த், சிம்புதேவன், வெங்கட் பிரபு..ஒரு மனதாக பாராட்டு

திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்ததாக நித்யாமேனனின் நடிப்பை முன்னணி இயக்குநர்கள் வசந்த், சிம்புதேவன், வெங்கட்பிரபு பாராட்டியுள்ளனர். சென்னையில் நடைப்பெற்ற குறும்பட போட்டியில் கலந்துக்கொண்ட 5000 பேர் மத்தியில் நித்யா மேனனை மூன்று பெரும் இயக்குநர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா பிற மொழி சினிமாக்களில் சமீப காலமாக சிறப்பாக நடித்து வருபவர் நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படம் இவரது நடிப்பை வெகுவாக வெளிக்கொணர்ந்துள்ளது. குறும்பட இயக்குநர்களுக்கான பிரம்மாண்ட போட்டி தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் … Read more

சுந்தர் சியின் காபி வித் காதல் ட்ரெயிலர் லான்ச்.. வீல் சேரில் வந்த டிடி.. ரசிகர்கள் கவலை!

சென்னை : சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல். தனக்கேயுரிய காமெடி ஜானரில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் யோகிபாபு, டிடி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடவுள்ளது. அக்டோபர் 7ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காபி வித் காதல் படம் நடிகர்கள் … Read more

விஜய்-அஜித்தை வைத்து படம்..வெங்கட் பிரபு மீண்டும் அறிவிப்பு..நடைமுறையில் சாத்தியமா?

சென்னை: மாறிவரும் சினிமாத்துறையில் சாத்தியமில்லாதது சாத்தியமாகி வருகிறது. அதை தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு. அஜித்-விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கத்தயார் என மீண்டும் அறிவித்துள்ளார். பான் இந்தியா காலத்தில் பிரபலங்கள் இணைந்து நடிப்பது சாதாரணமாகி வரும் சூழலில் விஜய், அஜித், வெங்கட் பிரபு இணைவது சாத்தியமே என சினிமா ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர். ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்குநர்கள் போட்டியில் வெங்கட் பிரபு வாழ்த்து தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா சென்னையில் … Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள்.. 4 படங்கள் ரிலீசுக்கு ரெடி!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தியவர். தொடர்ந்து கதைக்களங்களுக்கு தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன்னுடைய கேரக்டரும் கதைக்களங்களுக்கும் முக்கியத்தும் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய கேரக்டரின் துவக்கத்திலிருந்தே சிறிய கேரக்ராக இருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு … Read more

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி… நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல்

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் வாரிசு விஜய் ஹீரோவாக நடிக்க வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் வாரிசு … Read more

மகேஷ்பாபுக்கு வில்லனாக ஓகே சொன்ன விஜய்.. சுவாரஸ்யம் பகிர்ந்த இயக்குநர்!

சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கைக்கொடுப்பவர். ஆனாலும் விஜய்க்கு இருக்கும் மாசான ரசிகர்கள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் காரணமாக அதிரடி ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வாரிசு படத்தில் இணைந்துள்ள விஜய் இதன் சூட்டிங் நிறைவு பெற்றவுடன் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தன்னுடைய அறிமுக படமான நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தபோது ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை … Read more

விளம்பரங்கள் மூலம் பிரபலமானவரும் அனிருத்தின் உறவினருமான எஸ்வி ரமணன் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: ஊடகத்துறையில் வானொலி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர் எஸ்வி ரமணன். பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் கே சுப்பிரமணியம் மகனான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த எஸ்.வி. ரமணன் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. கே சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி. ரமணன் தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர் என பன்முக ஆளுமையாக வலம் வந்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். அவரது மகனும் வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் … Read more