விஷால் – லைகா தரப்பு பஞ்சாயத்து… வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஷால் தற்போது ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெளியான போது லைகா நிறுவனம் ரிலீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. லைகா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷாலின் வீரமே வாகை சூடும் விஷால் நடிப்பில் கடைசியாக வீரமே வாகை சூடும் திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துபா சரவணன் … Read more

ஐதராபாத் செல்லும் பொன்னியின் செல்வன் படக்குழு.. இன்னைக்கு பிரமோஷன் அங்க தான்!

ஐதராபாத் : பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் தற்போது பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர் சென்னையில் துவங்கிய இந்த பிரமோஷனல் டூர், கேரளா, பெங்களூருவை தொடர்ந்து இன்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான தனி விமானத்தில் படக்குழுவினர் தங்களது பயணங்களை நடத்திவரும் சூழலில் தற்போது படக்குழுவினரின் செல்பி வெளியாகியுள்ளது. சிறப்பான பிரமோஷன்கள் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் … Read more

லிப் கிஸ் அடித்து மோதிரம் அணிவித்த காதலன்.. அமீர்கான் மகளுக்கு அட்டகாசமாக நடந்த நிச்சயதார்த்தம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானின் நிச்சயதார்த்தம் கோலாகலமக நடந்துள்ளது. நடிகர் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தாவின் மகள் தான் இரா. கடந்த இரு ஆண்டுகளாக நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. #AamirKhan ஹாஷ்டேக்கில் நெட்டிசன்கள் அமீர்கானின் மகளை வாழ்த்தி வருகின்றனர். அமீர்கான் மகள் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தது நாடு முழுவதும் பரபரப்பை … Read more

அவரை பார்க்கும் போதே நமக்கு தானா சுறுசுறுப்பு வரும்.. அருள்மொழிவர்மன் யாரை சொல்றார்னு தெரியுதா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகை த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார். அந்த … Read more

பார்த்திபனின் குண்டக்க மண்டக்க இயக்குநர் மரணம்..சோகத்தில் திரைத்துறை!

சென்னை : பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க பட இயக்குநர் எஸ். அசோகன் திடீரென மரணமடைந்துள்ளார். திரைத்துறையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இயக்குநர் எஸ் அசோகனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இயக்குநர் எஸ் அசோகன் 2005ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் குண்டக்க மண்டக்க இந்த படத்தில் பார்த்திபன்,நடிகர் வடிவேலு, ராய் லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபனின் வழக்கமான குண்டக்க மண்டக்க கேள்விகள் படம் … Read more

சூட்டிங் துவங்கிய நாக சைத்தன்யா -வெங்கட் பிரபு படம்.. சூப்பர் இளையராஜா -யுவன் காம்பினேஷன்!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, மன்மத லீலை படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது அவர் நாக சைத்தன்யா -கிரீத்தி ஷெட்டி லீட் கேரக்டர்களில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பே போடப்பட்ட நிலையில், தற்போது சூட்டிங் துவங்கவுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தடுத்த சிறப்பான படங்களை இயக்கி வருகிறார். ஹீரோவாகவே இவரது பயணம் துவங்கினாலும், … Read more

விக்ரமின் கோப்ரா படம்.. சோனி லைவில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது!

சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது கோப்ரா படம். இந்தப் படத்தில் சிறப்பான கெட்டப்புகளால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விக்ரம். கணிதத்தால் அனைவரையும் கலங்கடிக்கும் ஒரு சாமானிய ஆசிரியராக விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தார். நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மகான் படம். இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் … Read more

பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்யை மிஞ்சும் ராஜமௌலியின் அடுத்த படைப்பு..சாகசபடமா? கொல மாஸ் அப்டேட்!

சென்னை : ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பில் ஹாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்டிஆர், ராம்சரண்,அஜய்தேவ்கன், ஆலியாபட் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பையும் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. மகேஷ்பாபுவுடன் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். 500 … Read more

'சீதா ராமம்' மிஸ் ஆன காட்சி..இந்த சீனும் நல்லாத்தானே இருக்கு..கத்திரி போட காரணம் என்ன?

சென்னை : ரசிகர்களிடம் பேராதரவை பெற்ற சீதா ராமம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதா ராமம். ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து ரசிகர்களும் பாராட்டை பெற்று வருகிறது. சீதா ராமம் கதை தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் அதாவத கதையின் … Read more

நீங்க பார்க்க ரெடியா?..ஓடிடியில் வெளியாகும் கோப்ரா..எந்த ஓடிடி தளம்னு தெரியுமா?

சென்னை : சீயான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோப்ரா கதை கணக்கு வாத்தியாரானா விக்ரம், … Read more