“அரசியலில் இருந்து நான் விலகினாலும் என்னை விட்டு அது விலகவில்லை”: பஞ்ச் வைத்த சூப்பர் ஸ்டார்

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சிரஞ்சிவியுடன் சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காட்ஃபாதர்’ அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ஆடியோ ஆந்திராவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹிட் அடிக்குமா காட்ஃபாதர்? சிரஞ்சீவியின் நடிப்பில் இறுதியாக வெளியான ‘ஆச்சார்யா’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் அடுத்த மாதம் … Read more

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பாலிவுட் இயக்குநர்?: லோகேஷ் என்ன சொல்லப் போறார்

மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 4 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. லோகேஷ் யுனிவர்ஸ் முதல் படமான மாநகரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்து இயக்கிய கைதி படத்தில் தரமான சம்பவம் செய்திருந்தார். கார்த்தி, நரேன், … Read more

ஷோபா முதல் தீபா வரை..வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகைகளின் சோக கதை

சென்னை: சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே தற்கொலை செய்துக்கொண்ட நடிகைகள் அந்த காலம் முதல் இன்றுவரை இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகை ஷோபா தொடங்கி தீபா வரை பட்டியல் நீளுகிறது. வாழ்க்கையில் பணம், வசதி மட்டும் நிம்மதியை தராது, நிம்மதி நாம் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்கள் கூட போராடி வாழும்போது அனைத்து வசதிகளும் உள்ளவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகைகள் அன்றும் உண்டு இன்றும் உண்டு. தற்கொலை … Read more

’பொன்னியின் செல்வன்’ அருள்மொழிவர்மன் ரோலுக்கு எம்ஜிஆர் டிக் செய்த நடிகர்..கார்தி சொன்ன சுவாரஸ்ய கதை

பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அதுகுறித்து பல சுவாரஸ்ய கதைகள் வெளியாகி வருகிறது. அதில் பல இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்று. வேறு எந்த படத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. இந்தப்படத்தின் கதா பாத்திறங்களில் நடிக்க பல மெகா ஸ்டார்கள் விரும்பியுள்ளனர். எம்ஜிஆர், கமல், ரஜினி என மெகா ஸ்டார்களே ஆசைப்பட்ட படத்தின் கேரக்டர்கள் பற்றி கதை கதையாக விஷயம் வெளியே வருகிறது. பாராட்டு-விமர்சனம் படம் வரும் … Read more

“துணிவு“ படம் நின்னு பேசும்…கவலைபடாதீங்க…எச் வினோத் ட்வீட்!

சென்னை : எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் எச் வினோத் ட்விட்டரில் படம் நின்னு பேசும் என பதிவிட்டுள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டப்பார்வை, வலிமை படத்தை இயக்கிய எச் வினோத். தற்போது அஜித்தின் 61வது படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கிறார். … Read more

’துணிவு’ டைட்டில் சுவாரஸ்யம்..வியாழன், ’வி’ சென்டிமென்டை கைவிட்ட அஜித்..ஃபார்முக்கு திரும்பிய வினோத்

சென்னை: நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் ஏகே.61 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது. ‘துணிவு’ எனப்பெயரிடப்பட்டு அஜித் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அஜித் தல டைட்டில் விவகாரத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் வியாழக்கிழமை சென்டிமென்ட், ‘V’ சென்டிமென்ட் தற்போது பின்பற்றப்படவில்லை. தனது நேர்கொண்ட பார்வை ஃபார்முக்கு வினோத் திரும்பி உள்ளார். வலிமை பட அப்டேட் செய்த சாதனை நடிகர் அஜித் சமீப ஆண்டுகளில் நடித்து வெளிவந்த படங்கள் பெரும் … Read more

ஆஸ்கருக்கு தேர்வான செல்லோ ஷோ… சினிமா பாரடைசோ படத்தின் காப்பியா?: வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்

சென்னை: 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்காக வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ தேர்வாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர், இரவின் நிழல் போன்ற திரைப்படங்கள் தேர்வாகாத நிலையில், ‘செல்லோ ஷோ; தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் செல்லோ ஷோ ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ், இந்தியத் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. டிஎஸ் நாகபரணா … Read more

“விவேக் சார் உயிரோட இருந்திருந்தா யார்கிட்டேயும் கை ஏந்த அவசியமே வந்திருக்காது”: உருகிய போண்டா மணி

சென்னை: தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி. மறைந்த காமெடி நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள போண்டா மணி ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். காமெடி என்டர்டெயினர் தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேலு ஆகியோருடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி. சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் தனது … Read more

சிவாஜியின் குரல் கேட்டு தன்னை அறியாமல் கண்ணீர் விட்ட கார்த்தி… இளையராஜா மட்டும்தான் துணையாம்

சென்னை: விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்சமயம் சர்தார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்திரம் தான் சர்தார் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கார்த்தி கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் சிவாஜி கணேசன், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா அவர்களைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். கார்த்தியின் ஆசை நடிகர் கார்த்திக்கிற்கு சிறு வயது முதலே கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இப்போது தயாரிப்பாளராக … Read more

கடவுளுக்கு இரக்கமே இல்லையா? வெண்ணிலா கபடிக்குழு நடிகரின் பரிதாப நிலை!

சென்னை : வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த நடிகர் ஹரிவைரவனின் தற்போதைய நிலையை பார்த்தால் கறையாத கல்நெஞ்சமும் கறைந்துவிடும். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். வெண்ணிலா கபடிக்குழு வெண்ணிலா கபடிக்குழு படத்தில் விஷ்ணு விஷாலின் … Read more