எனக்கு பைக் விபத்து நடந்தால் கௌதம் கணக்கில்தான் எழுத வேண்டும்.. ப்ளூ சட்டை மாறன் நேரடி தாக்குதல்!

சென்னை :நடிகர் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. நடிகர் சிம்பு நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான இந்தப் … Read more

ஃபேவரைட் இயக்குநர் அட்லீ பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையினரை கவர்ந்தவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களிலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றனர். செப்டம்பர் 21ந் தேதியான இன்று அட்லீ தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நாளையில் அட்லீ பற்றி இதுவரை வெளிவராத சுவாரசியமான தகவலை பார்க்கலாமா? நிஜ பெயர் இயக்குநர் அட்லியின் உண்மையான பெயர் அருண்குமார். அட்லீ என்பது … Read more

வாத்திய கலைஞர்களுடன் செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்.. சார் இதுகூட தெரியுமா உங்களுக்கு!

திருவனந்தபுரம் : கல்கியின் சிறப்பான கலைப்படைப்பான பொன்னியின் செல்வன் படம் திரைவடிவம் பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு சிறப்பாக உள்ள நிலையில் பிரமோஷனையும் மிகவும் சிறப்பான வகையில் படக்குழுவினர் செய்து வருகின்றனர். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி என முன்னணி நடிகர்கள் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். அமரர் கல்கி அமரர் கல்கியின் சிறப்பான படைப்புகளில் … Read more

பொன்னியின் செல்வன் முதல்நாள் முதல் ஷோவை விசிலடிச்சு பாக்கணும்.. ஜெயராமின் வேற லெவல் ஆசை!

சென்னை : நடிகர் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் அதாவது செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இன்னும் 9 நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் திடீர் ரெய்டு..பின்னணி என்ன?

சென்னை : நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நடிகர் சூரி மதுரையில் பல இடங்களில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். அம்மன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் அனைத்து வெரைட்டி ரைஸ்களும் தரமானதாகவும், விலையும் குறைந்து இருந்தால், ஓட்டலுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்த உணவகங்களை சூரியின் தம்பி கவனித்து வருகிறார். நடிகர் சூரி … Read more

ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய கோலிவுட் டாப் ஹீரோக்கள்.. ஒரேயடியாக சினிமாவை விட்டு விலகுகிறாரா நம்பர் நடிகை?

சென்னை: புதிதாக யாராவது அணுகி கதை சொல்ல வந்தால், உடனடியாக எண்ட் கார்டு போட்டு நோ சொல்லி வருகிறாராம் அந்த நம்பர் நடிகை. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறி விட்டாலும், இன்னமும் அந்த பட்டத்தை சுமந்து கொண்டு வலம் வருகிறார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய நிலையில், பக்கத்து ஸ்டேட் நடிகர்களுடன் நடித்து வருகிறார். திருமணம் ஆகி விட்டாலே திறமைக்கு இருக்கோ இல்லையோ திருமணம் ஆகி விட்டாலே டாப் … Read more

ஏகே 61 படத்தின் டைட்டில் லீக் ஆகிடுச்சா? பரபரக்கும் தகவல்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ?

சென்னை: நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் இதுதான் என சோஷியல் மீடியாவில் ஒரு டைட்டில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ள ஏகே 61 படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. தாய்லாந்தில் கடைசி கட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் என்ட்ரி ஏகே 61 படத்தின் அசத்தல் அப்டேட் உடன் … Read more

வைரமுத்து பற்றி மணிரத்னம் பேசியது.. 'கோவலன் கொலை' என சீறிய சீனு ராமசாமி.. என்ன ஆச்சு?

சென்னை: வைரமுத்துவை விட திறமையான எழுத்தார்கள் வருவார்கள் போவார்கள் என மணிரத்னம் பேசியது இயக்குநர் சீனு ராமசாமியை வெகுவாக பாதித்துள்ளது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ என்றால் வரிகளுக்கு வைரமுத்து கண்டிப்பாக இடம்பெற்றிருப்பார். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை முற்றிலுமாக படக்குழு ஒதுக்கி விட்டது. வைரமுத்துவை ஒதுக்கிய மணிரத்னம் வைரமுத்துவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி வந்த மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படத்தில் அவரை முற்றிலுமாக ஒதுக்கியது ரசிகர்களை … Read more

ரிலீசுக்கு முன்னாடியே 200 கோடி பிசினஸா? மாஸ் காட்டும் நயன்தாரா படம்.. காரணம் யாரு தெரியுமா?

ரிலீசுக்கு முன்னாடியே 200 கோடி பிசினஸா? மாஸ் காட்டும் நயன்தாரா படம்.. காரணம் யாரு தெரியுமா? ஹைதராபாத்: சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள காட்ஃபாதர் படம் தான் ரிலீசுக்கு முன்பாகவே 200 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் லூசிஃபர். அந்த படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். … Read more

நீ தான் தைரியமான ஆளாச்சே.. என்ன செய்யப்போற.. கெளதம் மேனனை விடாமல் வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த நிலையில், அவர் பேசுறதையெல்லாம் பார்க்கும் போது இறங்கி செய்யலாம்னு தோணுது என கெளதம் மேனன் பேசியிருந்தது பரபரப்பை கிளப்பியது. அந்த டிவி பேட்டியை பார்த்ததில் இருந்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனனை விடாமல் வச்சு செய்து வருகிறார். நீ தான் தைரியமான ஆளாச்சே.. என்ன செய்யப் போறேன்னு ஓப்பனா சொல்லு என காலையிலேயே மீண்டும் ஏழரையை … Read more