கரகாட்டக்காரன் -2 நடிக்க மறுத்தது ஏன்? தாடி வைத்து துப்பாக்கியுடன் புதிய ஹீரோ ரோல்..ராமராஜன் பேச்சு

தமிழ் சினிமாவின் கிராமத்து ராஜன் எம்ஜிஆர் பாணியை பின்பற்றி நடித்த ராமராஜன் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிக்க வந்துள்ளார். இரண்டாவது இன்னிங்க்சில் சற்று வித்தியாசமாக தாடி வைத்தும், துப்பாக்கி தூக்கியும் நடித்துள்ளாராம். ராமராஜனின் சிறப்பான படமான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அணுகியபோது தான் மறுத்துவிட்டதாக அதற்கான காரணத்தையும் ராமராஜன் தெரிவித்துள்ளார். ராமராஜன் கிராமத்து ராஜன். இன்றும் கிராமத்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள நாயகன், உலக நாயகர்கள் எல்லாம் வன்முறை நோக்கி நகரும்போது … Read more

ஐஸ்வர்யா ராய் கூட சிரிச்சே பேசக் கூடாதுன்னு மணி சார் திட்டுவாரு.. ஓப்பனா பேசிய த்ரிஷா!

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அந்த படத்தை பெரிதளவில் புரமோட் செய்ய கேரளாவிற்கு தற்போது படக்குழுவினர் படையெடுத்துள்ளனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் பெருமை டோலிவுட்டுக்கு இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர், சாண்டில்வுட்டுக்கு கேஜிஎஃப் 2, பாலிவுட்டுக்கு பிரம்மாஸ்திரா என மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸானதை போல … Read more

வாசலில் உன் காலணி..நீ எங்கே போனாய் மகளே..மகள் தூரிகையை நினைத்து உருகும் கவிஞர் கபிலன்

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மகள் தூரிகையின் திடீர் மரணத்தை தந்தை கபிலனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகளை நினைத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். வாசலில் உன் காலணி இருக்கிறது. நீ மட்டும் எங்கே போனாய் மகளே என்று கேட்டு உருகியிருக்கிறார். கவிஞர் கபிலனின் மகள் தந்தையைப்போல கலைத்துறையில் திரைக்கவிஞர் கபிலன் தமிழ் திரையுலகில் முற்போக்கு கருத்துக்களுடன் பாடல் எழுத வந்தவர். தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது முற்போக்கு … Read more

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்களை பார்க்க ரெடியா.. தனுஷ், அருள் நிதி படங்கள் வெளியாக இருக்கு!

சென்னை : ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளுக்கு இணையான அல்லது அதற்கும் மேலான படங்களை வெளியிட்டு வருகின்றன ஓடிடி தளங்கள். திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத பல முன்னணி படங்களை ஓடிடி தளங்களில் குறைவாக கட்டணங்களில் மக்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. சிறப்பான ஓடிடி தளங்கள் கொரோனா தாக்கம் பல்வேறு மோசமான விளைவுகளை கொடுத்தது. குறிப்பாக லாக் டவுன் உள்ளிட்ட பல பிரச்சினைகளை திரையுலகினர் சந்தித்தனர். மக்களும் … Read more

பொன்னியின் செல்வன் உடன் மோதும் தனுஷ்.. நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாத வெளியீடு என அறிவித்து வந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த அதே தேதியில் தான் நானே வருவேன் ரிலீஸாக போகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷ் களமிறங்குகிறார். நடித்துத் தள்ளும் தனுஷ் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு அட்ரங்கி ரே/கலாட்டா கல்யாணம், மாறன், தி … Read more

சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குநர்.. கெளதம் வாசுதேவ் மேனனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: உருவ கேலி செய்யாதீங்க என சிம்பு பேசிய நிலையில், அவர் நடிப்பில் வந்த பழைய படங்களின் பாடல்களில் இருந்த வரிகளை போட்டு சிம்பு எப்படியெல்லாம் உருவ கேலி செய்துள்ளார் என பஞ்சாயத்தை கிளப்பி வந்த ப்ளூ சட்டை மாறன் அடுத்ததாக தற்போது இயக்குநர் கெளதம் மேனன் பக்கம் திரும்பி உள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் கடந்த வாரம் வெளியானது. வசூல் … Read more

படம் பார்க்க வரீங்களா.. இல்லை படம் காட்ட வரீங்களா.. பிவிஆருக்கு அப்படியொரு உடையில் வந்த உர்ஃபி!

மும்பை: இந்தி டிவி சீரியல் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான உர்ஃபி ஜாவேத் தனது அதீத கவர்ச்சி உடைகளால் சோஷியல் மீடியா சென்சேஷன் ஆகி வருகிறார். உள்ளாடை அணியாமல் சமீபத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்த உர்ஃபி ஜாவேத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அவர்கள் மீது ஆவேசமாக பாய்ந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பிவிஆர் தியேட்டருக்கு உள்ளாடைகள் வெளியே தெரியும்படி ரொம்பவே மோசமாக உடை அணிந்து படம் பார்க்க வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். … Read more

கமல்ஹாசனை தலைவரேன்னு சொன்ன மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் ரன்னிங் டைமுக்கு இப்படியொரு விளக்கமா?

சென்னை: அடுத்த வாரம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை புரமோட் செய்ய இன்னும் ஒரு வாரத்திற்கு ஏகப்பட்ட இடங்களுக்கு பொன்னியின் செல்வன் படக்குழு பயணம் மேற்கொள்கிறது. பெரிய படங்களுக்கு புரமோஷன் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் ராஜமெளலி எடுத்துக் காட்டிய நிலையில், பல பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களும் அதே வழியை சரியாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், புரமோஷன் சந்திப்பில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசனை தலைவரேன்னு சொன்ன வீடியோ … Read more

வஞ்சம் கொண்டு பழிவாங்கும் நந்தினி..ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா?

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க என் முதல் தேர்வாக இருந்தவர் பாலிவுட் நடிகை என மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 1950களில் அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்த நாவல், கல்கி என்ற இதழில் 1950 முதல் 1954 வரை நீண்ட தொடர்கதையாக வெளிவந்தது. இந்த தொடர்கதை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதன் பின் 5 பாகங்கள் கொண்ட தொகுப்பாக இந்த நாவல் வெளிவந்தது. … Read more

அவருக்கு பாசிட்டிவ்.. இவருக்கு நெகட்டிவா? அடுத்த படத்துக்கும் விமர்சகருக்கு வெயிட்டான கவனிப்பாம்!

சென்னை: நூடுல்ஸ் செய்ய ஆகும் நேரத்தை விட குறைவாக விமர்சனத்தை சொல்லி முடிக்கும் அந்த நெகட்டிவ் விமர்சகர் தேவையில்லாமல் அந்த நடிகருடன் வம்பிழுத்து இந்த வாரத்துக்கான பிழைப்பை ஓட்டுகிறார் என நடிகரின் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். சினிமாவில் தனக்கு பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரியும், பிடிக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் செயல்பட்டு வருகிறார் அந்த விமர்சகர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ஒல்லி நடிகர் நடித்த படத்தை பாராட்டி பேசிய அவர், தற்போது வம்பு நடிகர் படத்துக்கு மட்டும் தேவையில்லாமல் … Read more