’உங்கள் கழிப்பறையை நானே கழுவுவேன்’..தேர்தல் தோல்வியால் உறவு இல்லாமல் போகாது..கமல்

தேர்தல் தோல்விக்குப்பின் முற்றிலும் நேரடி அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த கமல்ஹாசன் மீண்டும் தொகுதி மக்களை சந்தித்தார். விக்ரம் பட தயாரிப்பு, நடிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் அதன் வெற்றியால் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார். சூட்டோடு சூடாக இந்தியன் 2 பட படபிடிப்பையும் தொடங்கிவிட்டார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் தொகுதி மக்களை சந்திக்க கோவை வந்தார். மீண்டும் மக்கள் நீதி மய்யம் அவதாரம் நடிகர் கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பின் … Read more

ஒரு ஆண்டை கடந்த விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம்.. விரைவில் 2வது பாகம் எடுக்கப் போறாங்களாம்!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ரிலீசானது கோடியில் ஒருவன். இந்தப் படம் ரிலீசாகி தற்போது ஒரு ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பன்முகத் திறமை காட்டி … Read more

ரஷ்யாவிற்கு செல்லும் புஷ்பா டீம்.. சூட்டிங்குன்னு தானே நினைக்கிறீங்க.. அதுதான் இல்லை!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் மிரட்டியது. தற்போது புஷ்பா 2 படத்தின் சூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் அலா வைகுந்தபுரமுலு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இந்தப் படம் அவரை பான் இந்தியா ஸ்டாராக … Read more

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு..பாக்யராஜ் மீண்டும் குற்றச்சாட்டு

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என பாக்யராஜ் மீண்டும் தெரிவித்துள்ளார். இயக்குநர் வசந்தபாலன் ஏற்கெனவே இதுபோல் தெரிவித்திருந்தார். பாக்யராஜும் தமிழ் திரையுலகில் எழுத்தாளர்கள் தட்டுப்பாடு உள்ளதாக தெரிவித்திருந்தார். திரைக்கதை மன்னர்கள், ஜாம்பவான்கள் இருந்த தமிழ் திரையுலகம் தமிழ் திரையுலகம் ஒரு காலத்தின் அதன் சிறந்த கதாசிரியர்களால் மிகவும் மதிக்கப்பட்டது. தமிழ் திரையுலகம் தாண்டி … Read more

கொரியர்களை இழிவாக பேசினாரா சிவகார்த்திகேயன்?..இனவெறி பேச்சு.. ஆங்கில ஊடகங்கள் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமான தலைக்கனம் இல்லாத கலைஞர் என்பதால் அனைவராலும் விரும்பப்படும் நடிகர். இனவெறி கலந்த பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் விஷத்தை விதிக்கிறார், தன் இனவெறி பேச்சை பள்ளி மாணவர்களிடம் கொண்டுச் சென்றுள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. காமெடி என்கிற பெயரில் இனவெறி தூண்டல் பேச்சால் சிவகார்த்திகேயன் ஆங்கில ஊடகங்களாலும், நெட்டிசன்களாலும் விமர்சிக்கப்படுகிறார். உழைப்பால் உயர்ந்த மனிதர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் கால்பதித்தார். … Read more

வாசல் வந்த காற்றை மறக்க முடியுமா? 22 ஆண்டுகளை கடந்த ரிதம் படம்!

சென்னை : நடிகர் அர்ஜுன், ஜோதிகா, மீனா இணைந்து நடித்து கடந்த 2000ல் வெளியான படம் ரிதம். தன்னுடைய வழக்கமான ஆக்ஷன்களில் இருந்து விலகி மென்மையான நடிப்பை வழங்கியதன்மூலம் இந்தப் படத்தில் அர்ஜுன் கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றைய தினம் 22 ஆண்டுகளை கடந்துள்ளது. படம் குறித்து பேச எவ்வளவோ விஷயங்கள் உள்ளபோதிலும் சில விஷயங்களை தற்போது நினைவுகூறலாம். ரிதம் படம் நடிகர் அர்ஜூன், ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ், லஷ்மி … Read more

சீதா ராமம் ப்ளாக் பஸ்டர் ஹிட்: மும்பை மீடியாக்களுக்கு நன்றி சொன்ன துல்கர் சல்மான் டீம்

மும்பை: துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் ஆக.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் காதல் பின்னணியில் உருவாகியிருந்த சீதா ராமம் படத்தை ரசிகர்களை கொண்டாடித் தீர்த்தனர். பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள ‘சீதா ராமம்’ திரைப்படம் தற்போது அமேசானில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களை உருக வைத்த சீதா ராமம் மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு … Read more

பள்ளி மாணவிகள் சூழ.. கோவையில் மீண்டும் கெத்துக் காட்டிய கமல்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: கோவை ராஜவீதியில் உள்ள அரசு பள்ளிக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய கமல் நடிகர்களை ரசிகர்கள் ஊக்கப் படுத்துங்கள் என பேசியிருந்தார். இன்னொரு புறம் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிசியாக பங்கேற்று வருகிறார் கமல். … Read more

பிரபாஸ் – அனுஷ்கா திருமணம்… மீண்டும் தொடங்கிய காதல் கிசு கிசு… இந்த முறையாவது கன்ஃபார்ம் ஆகுமா?

ஐதராபாத்: டோலிவுட்டின் டார்லிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ். பிரபாஸுக்கும் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், பிரபாஷும் அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக மீண்டும் தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. டோலிவுட் டார்லிங் டூ பான் இந்தியா பேச்சுலர் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக அசத்தி வரும் பிரபாஸ், பாகுபலி படம் வெளியான பின்னர் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். பிரபாஸ் … Read more

லைகர் தோல்வி.. போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்… சம்மதம் தெரிவித்த சார்மி: சோலி முடிஞ்சு!

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் நடித்த ‘லைகர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியா படமக வெளியான ‘லைகர்’ மிகப் பெரிய தோல்வியை தழுவியது. லைகர் திரைப்படத்தால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படம் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் டோலிவுட்டில் பிரபலமான விஜய் தேவரகொண்டா, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். யார் … Read more