80% பொருட்களுக்கு பூஜ்ஜிய வர்த்தக வரி: இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்து

புதுடெல்லி: இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை திறக்க இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் … Read more

அமெரிக்காவில் இலவசமாக 40 கோடி N95 முகக்கவசங்கள் வழங்க திட்டம்

மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு சுமார் 40 கோடி N95 முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாகவே ஒமைக்ரான் காரணமாக கரோனா தொற்று தீவிர நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,702 பேர் பலியாகி உள்ளனர். 6 6 கோடிக்கு அதிகமானவர்கள் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை … Read more

பிப்ரவரி 20: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,44,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

உ.பி. தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 35.88 % வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 3-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை சுமார் 35.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதி களில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.16 … Read more

2015 தொடங்கி 2021 வரை பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகள்: ஐ.நா. அறிக்கை

ஜெனீவா: 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரையிலான கடந்த 7 ஆண்டுகள்தான் இப்பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகளாக அறியப்படுவதாக (World Meteorological Organization) சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘State of Global Climate Report 2021’ எனும் பெயரில் இந்த அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தனைக்கும் 2020 தொடங்கியே குளிர் நிகழ்வான லா நினா நிகழ்வு நிலவி வருகிறது. இந்த நிகழ்வின்போது சராசரி வெப்பநிலை குறைவாகவே இருக்கும். … Read more

தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் ஏற்றி வந்து கல்யாண சீர் அளித்த வாட்ஸ்அப் குழுவினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (பிப்.20) நடைபெற்ற திருமண விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் கொண்டு வந்து சீர் அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரைக் கொண்டு “தமிழினி” வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினந்தோறும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த வாட்ஸ்அப் குழுவின் கவுரவ … Read more

பஞ்சாப் தேர்தல்: 1 மணி வரை 34.10 % வாக்குப்பதிவு: பாதல், சித்து வாக்களிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 34.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பஞ்சாபில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல நகரங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஜலந்தர் உள்ளிட்ட … Read more

வலுக்கட்டாயமாக கரோனா வரவழைத்து இறந்த பாடகி: தடுப்பூசி எதிர்ப்பாளர்களை சாடும் மகன்

செக் குடியரசின் கிராமியப் பாடகர் ஹானா ஹோர்கா. கரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அபாயகரமான பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே இருந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் தனக்கு வலுக்கட்டாயமாக கரோனா தொற்று ஏற்படும்படி செய்தார். கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள விடுதிகள், பார்கள், திரையரங்குகள், கலை நிகழ்ச்சிக் கூடாரங்களில் நுழைய இரண்டு டோஸ் தடுப்பூசி … Read more

தமிழகத்தில் இன்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று; சென்னையில் 223 பேருக்கு பாதிப்பு- 3,172 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,44,929. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,91,011. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 223 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

அகிலேஷ் யாதவ் நவீன கால அவுரங்கசீப் – சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வை நவீன கால அவுரங்கசீப் என்று விமர்சித்துள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.16 கோடி பேர் … Read more