லாகூரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட மூவர் பலி

பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரின் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளனர். லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய நகரம் லாகூர். வணிக நகரமான இங்கு பல சந்தைகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் இங்கு வருவதுண்டு. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வால்ட் சிட்டிக்கு அருகில் … Read more

அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு: சென்னையில் குறைவாக பதிவான வாக்குகள்- 268 மையங்களில் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு … Read more

லக்கேஜ்ஜை ஒப்படைப்பதில் அலட்சியம்: ஸ்பைஸ்ஜெட் விமான பயணிக்கு ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவு

ஹைதராபாத்:கன்ஷாம் தாஸ் பஜாஜ் என்ற 75 வயது முதியவர், கடந்த 2019 ஆகஸ்ட் 14 அன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஹைதரா பாத்திலிருந்து பெங்களூருக்கு சென்றார். அங்கு அவருடைய லக்கேஜ்ஜுக்காக காத்திருந்தார். ஆனால் அவருடைய லக்கேஜ் வரவில்லை. ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்த போது, அவருடைய லக்கேஜ்ஜில் பவர் பேங்க் இருந்ததால், விமானத்தில் ஏற்றப்படவில்லை என்றும், அவர் அனுமதிக் கடிதம் வழங்கினால், அவருடைய லக்கேஜ்ஜை திறந்து அதிலிருந்து பவர்பேங்க்கை எடுத்துவிட்டு, லக்கேஜ்ஜை மறுநாள் காலை ஹைதராபாத்திலிருந்து … Read more

அமெரிக்காவில் 5-ஜி அறிமுகம் செய்ததால் ரத்து செய்யப்பட்ட விமான சேவையை தொடர ஏர் இந்தியாவுக்கு போயிங் அனுமதி

சிகாகோ: அமெரிக்காவில் நேற்று முன்தினம்5-ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்பட்டது. இதனால் விமானங்களின் மின்னணு செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் போயிங் விமானங்களை ரத்து செய்யுமாறு போயிங் நிறுவனம் அறிவுறுத்தியது. போயிங் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் 8 விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்திருந்தது. உரிய சோதனைகளுக்குப் பிறகு மின்னணு பாதிப்பு ஏற்படாதுஎன்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சேவைகளைத் தொடருமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நியூயார்க் நகருக்கு விமான சேவையைஏர் இந்தியா … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நீலகிரியில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிக வாக்குப்பதிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்களை விட ஆண் அதிக அளவில் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்கள், பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளர் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பத்தற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் … Read more

உலகின் சிறந்த 30 சுற்றுலா தலங்களில் கேரள கிராமம்: அருந்ததி ராயின் புக்கர் பரிசு வென்ற நாவலால் கிடைத்த அங்கீகாரம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997-ம் ஆண்டு ‘த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இது அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது. இந்தியாவில் இருந்து புக்கர் பரிசுபெற்ற … Read more

தொடரும் பதற்றம்: உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிக்கும் ரஷ்யா

உக்ரைனின் எல்லைப் பகுதியில் தங்களது நாட்டு ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு … Read more

வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு – மதுரை மேலூர் பாஜக முகவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு

மதுரை: மதுரை மேலூர் வாக்குச்சாவடி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த பாஜக முகவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. இந்த நகராட்சியில் 8-வது வார்டில் அல் – அமீன் உருது தமிழ் பள்ளி வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை … Read more

சாமியாரிடம் ரகசிய தகவல்கள் பகிர்ந்த விவகாரம்: தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: இமய மலை சாமியாரிடம் தேசிய பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட வழக்கில், அதன் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்த … Read more

உலக மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்கள் வரியை அதிகப்படுத்துங்கள்: உலக கோடீஸ்வரர்கள் விடுத்த விநோத கோரிக்கை

உலக அளவில் மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் என்று 100க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்த கோடீஸ்வரர்களில் டிஸ்னி ஹெய்ரிஸ், அபிகெயில் டிஸ்னி ஆகியோரும் உள்ளனர். ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மாநாடு இந்த வாரம் நடந்தது. இதில் புதன்கிழமை சர்வதேச கோடீஸ்வரர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு பேசினர். இதில் 102 கோடீஸ்வரர்கள் சார்பில் கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “வரிமுறை சரியாக இல்லை என்று … Read more