பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் நாசர் தகவல்

வேலூர்: தமிழகத்தில் விவசாயிகள் நலன் கருதி பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஜமால்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் ( அணைக்கட்டு), கார்த்திகேயன் … Read more

மாதையன் மரணம் | வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: “நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஆய்வு செய்து, அவர்களின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுள்ள அறிக்கையில், “வீரப்பன் அண்ணன் மாதையன் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசியாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலம் மோசம் அடைந்து சிறையிலேயே உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நீண்டகால சிறைவாசிகள் குறித்து ஆய்வு … Read more

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டி – மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த 57 இடங்களையும் நிரப்புவதற்கான … Read more

“படிப்பு, பட்டம் கடந்து தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்” – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் முதல்வர் அறிவுரை

சென்னை: கல்வி என்பது வெறும் பட்டமல்ல அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் முதல்வர் பேசியது: “இந்தக் கல்லூரி என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. நான் சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய ஹாரிங்க்டன் ரோடில் அமைந்திருக்கக்கூடிய எம்சிசி பள்ளியில் தான் எனது பள்ளிப்படிப்பை … Read more

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் வருகை – 930 மாணவர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஆய்வு

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கல்லூரி விழாவில் அவர் கலந்துக்கொள்ள உள்ளதால், இதில் பங்கேற்க உள்ள 930 மாணவ, மாணவியரின் சமூக வலைதள பக்கங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதனால், இப்போதிருந்தே ஹைதராபாத்தில் … Read more

சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள்: விசாரணை அதிகாரி டேவிதார் ஆய்வு 

சென்னை: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விசாரணை அதிகாரி டேவிதார் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் மழை – வெள்ளம் தேங்கியது குறித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த ஜன.6-ம் தேதி பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. … Read more

கோக கோலா துணை நிறுவனம் மீதான அபராதத்துக்கு தடை

புதுடெல்லி: அமெரிக்காவின் குளிர்பான நிறுவனமான கோக கோலாவுக்கு வட இந்தியாவில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமாக மூன் குளிர்பான நிறுவனம் செயல்படுகிறது. உ.பி.யைச் சேர்ந்த சுசில் பட் மூன் குளிர்பான நிறுவனத்துக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் அந்நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயவும் குழு அமைத்தது. இதை எதிர்த்து மூன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

மோடி வருகை: மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை ஈ.வே.ரா சாலையில் பயணிப்பத்தை தவிர்க்க காவல் துறை வேண்டுகோள்

சென்னை: பிரதமர் மோடி வருகையை வியாழக்கிழமை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை ஈ.வே.ரா சாலையில் பயணிப்பத்தை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை சென்னை வருகிறார். மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். மேலும், ஆறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் சாலை மற்றும் … Read more

கியான்வாபி மசூதி வழக்கின் 2-ம் நாள் விசாரணை நிறைவு: கை, கால் கழுவும் இடத்தை மாற்ற உத்தரவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கு ஆகஸ்ட் 18, 2021-ல் தொடுக்கப்பட்டது. வாரணாசியின் சிவில் நீதிமன்றம் விசாரித்த வழக்கிற்கு, கியான்வாபி மசூதியினுள் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 இன் கீழ் தடை கோரி, மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து களஆய்வு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி … Read more

அமேசானில் பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25999 – அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்

புது டெல்லி: இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஒரு பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. அதை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உலகம் முழுவதும் தங்களது தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை வீடு தேடி சென்று விநியோகித்து வருகிறது அமேசான். இதில் உலக மக்கள் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராகவும், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளராகவும் உள்ளனர். இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இ-காமர்ஸ் தளங்களில் அமேசான் தளமும் ஒன்று. இந்நிலையில், இந்த … Read more