சட்டம் – ஒழுங்கு | “இன்னும் 4 ஆண்டு கால திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்

கோவை: “சமூக நீதி, சட்டம் – ஒழுங்கு ஆகியவற்றை வெறும் வார்த்தைகளில் வைத்துக் கொண்டிருக்காமல் திமுக அரசு அதை செயலில் காட்ட வேண்டும்” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் இன்று (மே 25) செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: “உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 75 சதவீதம் உயர்ந்திருந்த போதிலும், ரஷ்யா, உக்ரைன் போர் சூழல் காரணமாகவும் விலை அதிகரித்த போதிலும் … Read more

அவுரங்கசீப் செய்தார் என்பதற்காக அரசும் அதை செய்யுமா? – ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேராசிரியர் இர்பான் ஹபீப் கேள்வி

புதுடெல்லி: காசி, மதுராவின் கோயில்களை அவுரங்கசீப் இடித்தார் என்பதற்காக இப்போதைய அரசும் அதை செய்யுமா? என வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் (90) கேள்வி எழுப்பியுள்ளார். முகலாயர் வரலாற்று ஆய்வில்தன் சர்வதேச புகழால் பத்மபூஷனும் பெற்றவர் இர்பான் ஹபீப். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் மூப்பு நிலைப் பேராசிரியராக உள்ளார். மத நம்பிக்கையற்ற இடதுசாரி சிந்தனையாளரான அவர் ‘இந்துதமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் சிவன் கோயில் இடிக்கப்பட்டு கியான்வாபி மசூதி … Read more

சென்னை அண்ணா பல்கலை.யில் கரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு 

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் மூன்று மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்ததில், 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மூன்று … Read more

இந்துக்களை காங்கிரஸ் கட்சி அதிகம் வெறுப்பது ஏன்? – ஹர்திக் படேல் கேள்வி

புதுடெல்லி: ‘‘இந்துக்களை, காங்கிரஸ் கட்சி அதிகம் வெறுப்பது ஏன்?’’ என குஜராத்தின் படிதார் இன தலைவர் ஹர்திக் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக இருந்தவர் ஹர்திக் படேல். இவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, பா.ஜ.க மற்றும் அதன் விரைவான முடிவெடுக்கும் தன்மையை புகழ்ந்து வந்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். ராமர் கோயில் பற்றி குஜராத் காங்கிரஸ் தலைவர் தெரிவித்த கருத்து … Read more

குடும்பச் சண்டை, பள்ளியில் துன்புறுத்தல்… – 22 பேர் உயிரைப் பறித்த அமெரிக்க இளைஞரின் பின்புலம்

வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்நிலையில், அந்த இளைஞன் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. சால்வடர் ரொலாண்டோ ராமோஸ் என்ற அந்த 18 வயது இளைஞர் பற்றி அவருடன் பணியாற்றிவர்கள், அவரது பள்ளியில் படித்தவர், அவர் குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் எனப் பலரும் பல தகவல்களை சொல்லியுள்ளனர். அவரது உறவினர்களும், நண்பர்களும் வாஷிங்டன் போஸ்ட் … Read more

மாதையன் மரணத்துக்கு மனிதமற்ற அரசு எந்திரம்தான் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: “வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர் நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம்தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மாதையனை சிறைத்துறை அதிகாரிகள் சேலம் அரசு மருத்துவமனையில் … Read more

‘உலகை வழிநடத்தும் தலைவர்’ – வைரலான பிரதமர் மோடியின் ‘குவாட் உச்சி மாநாடு’ புகைப்படம்

புது டெல்லி: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார். அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவரது புகைப்படம் ஒன்று இணையவெளியில் வைரலாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு குறித்து பல்வேறு … Read more

‘‘நானே கவனித்துக் கொள்கிறேன்’’ – இலங்கை நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் முன்வராத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என … Read more

தமிழகத்தில் கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வேண்டும்: தாம்பரம் காவல் ஆணையர் ரவி 

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கபடவேண்டும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட குரோம்பேட்டையில் முதன் முதலாக அமைக்கபட்டுள்ள போக்குவரத்து எல்இடி சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்று திறந்து வைத்தார். மேலும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் கொடுத்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் காவலர்கள் உள்ளனர் ,இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பொருத்தவரை … Read more

அடுத்தது சர்க்கரை: சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய், கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை போல சூழலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய … Read more