பஞ்சாப் அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் – லஞ்ச புகார் காரணமாக முதல்வர் பகவந்த் மான் நடவடிக்கை

சண்டிகர்: பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து லஞ்ச வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரியில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. அந்த கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். விஜய் சிங்லா, சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறையின் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் அமைச்சர் விஜய் … Read more

தமிழகத்தில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வர் ஆணைக்கினங்க, இணையவழி தொடக்க நிகழ்ச்சி, மற்றும் 2022-23 கல்வியாண்டு … Read more

இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

2019 முதல் 2021 ஆம் ஆண்டுகள் அடங்கிய காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிகையில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றி பல்வேறு ருசிகர தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் தொகுப்பு: இறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: 2015-2016 காலகட்டத்தையும் 2019-2021 காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியர்கள் இறைச்சி உண்ணும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலுமே இறைச்சி உணவை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தேசத்தில் … Read more

'அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை' – சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: “அதிமுக எந்த வகையிலுமே எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான் பொதுவான மக்கள் கருத்தாக உள்ளது. அதனால், நான் தலைமைக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா கூறியுள்ளார். சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். … Read more

சிறுவனின் வெறுப்புணர்வு கோஷம் தொடர்பாக கேரளாவில் 3 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த 21-ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) சார்பில் நடைபெற்ற ஜன மகா சம்மேளனம் நிகழ்ச்சியின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பேரணியாக சென்றனர். அப்போது ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த சிறுவன், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்டான். அது மதவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கூட்டத்தில் சென்றவர்கள் சிறுவனின் கோஷத்தை வழிமொழிந்து கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிஎப்ஐ-யின் ஆலப்புழா பகுதி … Read more

சிதம்பரம் | லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 3 வயது குழந்தை உள்பட 4 பேர் பலி

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலையில் கூத்தன்கோவில் என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு காரைக்காலுக்கு சென்ற லாரி நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேலத்தில் இருந்து டைல்ஸ் மற்றும் கிரானைட் ஏற்றிக் கொண்ட சீர்காழி நோக்கி … Read more

தேசம் என்பது மேற்கத்திய கருத்தாக்கம் – 'கார்னர்' செய்த அதிகாரிக்கு ராகுல் காந்தி பதிலடி

“தேசம் என்பது மேற்கத்திய கருத்தாக்கம் இந்தியா வெகு நிச்சயமாக மாநிலங்களின் ஒன்றியம்” தான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்டி கல்லூரியில், `இந்தியா 75′ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பல்வெ ராகுல் காந்தி, பேசியவை அனைத்தும் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியிடம் இந்தியாவைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர் ஒரு வாதத்தை முன்வைத்தார். சித்தார்த் … Read more

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வண்ண வண்ணப் பூக்கள் – கொடைக்கானலில் தொடங்கியது மலர்க் கண்காட்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 59-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள் மற்றும் திருவள்ளுவர், சின்சாங், ஸ்பைடர் மேன், மயில் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. தொடக்க விழாவில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குநர் பாண்டியராஜன் வரவேற்றார். 4 அமைச்சர்கள் பங்கேற்பு கோடை விழாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் … Read more

என் தந்தையின் மரணம்தான் வாழ்வின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் – ராகுல்

லண்டன்: காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, பிரிட்டனின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்டி கல்லூரியில், `இந்தியா 75′ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்திய மாணவர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்ட கேள்விகளும் எழுந்தன. அப்போது ராகுல் பேசியதாவது: என் தந்தையின் மரணம்தான் என் வாழ்வின் மிகப்பெரிய … Read more

25 ஆண்டுகளாக கட்சியை திறம்பட வழிநடத்தியவர் – பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: பாமகவை கடந்த 25 ஆண்டு காலமாக அருமையாக வழிநடத்திய ஜி.கே.மணி, ஓய்வறியா உழைப்பாளி என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார். பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, கட்சி சார்பில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இந்த விழா நடந்தது. இதில் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் … Read more