திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம்

புதுடெல்லி: கோ – லொக்கேஷன் வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது. அதையெடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக, அவரிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோ-லொக்கேஷன் வசதியை என்எஸ்இ 2010-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வசதியை … Read more

படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்யும் முயற்சி கடந்த, பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பின் காகாசஸ் என்ற பகுதியில் நடந்ததாக உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. இருதரப்பினர் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகின்றன. அவர் … Read more

பிரதமர் நாளை தமிழகம் வருகை – பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: தமிழகத்தில் ரூ.12,413 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். ஹைதராபாத்தில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து 5.15 மணிக்கு புறப்படும் பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு … Read more

அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது – முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் மனு

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் 6 பேர் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர் … Read more

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும். 26-ம்தேதி (நாளை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை நகரின் சில இடங்களில் லேசான மழை … Read more

6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம் 

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவர்களில் … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘என் இனிய தோழரும், கேரள முதல்வருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் … Read more

மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் நன்மைகள் என்னென்ன?

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, பாசனப் பரப்புகளுக்கான தண்ணீர் தேவை எவ்வளவு, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம்: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 24) தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான … Read more

“ஆபாசமாக பேசுவதுதான் சீமானின் தரம், தகுதி” – ஜோதிமணி எம்.பி கொந்தளிப்பு

கரூர்: “பாஜகவின் பி டீம்தான் சீமான்” என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம்சாட்டினார். கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்ததற்கு பதில் அளித்திருந்தேன். அதற்கு நேர்மையாக பதில் அளிக்க முடியாத சீமான், மிகவும் ஆபாசமாக, வக்கிரமாக, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பதில் சொல்லியுள்ளார். நடிகை ஒருவர் ஆதாரத்துடன், பொதுவெளியில் சீமான் மீது … Read more