வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிப்படைத்தன்மையடன் மருத்துவர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் “முதல்வர் தலைமையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக 14,156 பணி மாறுதல்கள் … Read more

“திராவிட மாடல் எதையும் இடிக்காது… உருவாக்கும்; யாரையும் தாழ்த்தாது… சமமாக நடத்தும்” – ஸ்டாலின் விளக்கம்

சேலம்: ‘திராவிட மாடல்’ஆட்சி குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது… உருவாக்கும்; எதையும் சிதைக்காது… சீர்செய்யும்; யாரையும் பிரிக்காது… அனைவரையும் ஒன்று சேர்க்கும்; யாரையும் தாழ்த்தாது… அனைவரையும் சமமாக நடத்தும்” என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, “ஓயாத உழைப்பின் ஓராண்டு” என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சி குறித்து அளித்த விளக்கம்: “அனைவருக்குமான … Read more

“உண்மையான ஆன்மிகவாதிகள் எனில், திமுக அரசை ஆதரித்திருக்க வேண்டும்” – சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

சேலம்: “உண்மையான ஆன்மிகவாதிகள் என்றால், நியாயமாக திமுக அரசின் செயல்பாடுகளை ஆதரித்திருக்க வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, “ஓயாத உழைப்பின் ஓராண்டு” என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியது: “இந்த மேடைக்கு வரும்போது கருப்பும் சிவப்பும் பட்டொளி வீசிப் பறந்துகொண்டு இருந்தது. கருப்பும் சிவப்புமான அந்த இருவண்ணக் கொடிதான் நம்முடைய அடையாளம். அரசியல், … Read more

ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டோக்கியோ: அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று (செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோபைடனை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனிலும், அதன் பின்னர் ஜி-20, சி ஓபி 26 உச்சி மாநாடுகளிலும் இருதலைவர்களும் … Read more

கரோனா தீவிரத்தை அதிகப்படுத்துகிறது காற்று மாசுபாடு: புதிய ஆய்வு முடிவு

கரோனா தொற்றின் தீவிரத்தை காற்று மாசுபாடு அதிகப்படுத்துகிறது என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை கனடிய மருத்துவ சங்க இதழ் (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ளது. 1,51,105 பேர் பங்கெடுத்த இந்த ஆய்வின் முடிவில், ‘நுண்ணிய துகள் பொருள், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றை பொதுவாக மாசுப்படுத்தும் காரணிகளாக உள்ளன. எங்களது ஆய்வில் காற்று மாசுள்ள இடங்களில் வசிப்பவர்கள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது காற்று மாசின் காரணமாக கரோனாவின் தொற்றுக்கு … Read more

பெட்ரோல் விலை | “மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு” – முதல்வர் ஸ்டாலின்

சேலம்: “எப்போதும் மத்திய அரசு வரி குறைக்கப்படும்போது மாநில வரியும் தானாக குறையும். எனவே, மத்திய அரசு மட்டுமே வரியைக் குறைத்ததாக சொல்வது தவறு” என்று பெட்ரோல் விலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, “ஓயாத உழைப்பின் ஓராண்டு” என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, பெட்ரோல் விலை – வரி விவகாரம் குறித்து பேசியது: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

டோக்கியோ: குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அவர் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று (செவ்வாய்கிழமை) ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடனான சந்திப்பின்போது, 2021-ம் ஆண்டில் வாஷிங்டனில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் அவர் சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்தனர். இந்தியா – … Read more

குவாட் உச்சி மாநாடு | ஜப்பானுக்கு அருகே சீன, ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் சலசலப்பு

டோக்கியோ: குவாட் உச்சி மாநாடு நடந்து வரும் வேளையில், ஜப்பான் நாட்டின் வான்பரப்பு எல்லைக்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? – ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் … Read more

ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை: தமிழக அரசு

சென்னை: வெளிச்சந்தைகளில் தக்காளி விலை உயர்வினைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையாக அரசு பண்ணைப் பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70/ முதல் ரூ.80 வரை விற்பனை … Read more

உணவை ஆயுதமாக்கும் ரஷ்யா? – 2 கோடி டன்கள் கோதுமை உக்ரைனில் தடுப்பு: சமரசம் செய்யும் ஐ.நா.

நியூயார்க்: சமையல் எண்ணெய், கோதுமை என உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது செயற்கையான தட்டுப்பாடு எனவும் இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் போரில் ரஷ்யா உணவை ஆயுமாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. உக்ரைனில் 2 கோடி டன்கள் கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து சமரச முயற்சியில் ஐ.நா. இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல … Read more