ஊழல் குற்றச்சாட்டு: சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வர்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார். ஒப்பந்ததாரர்களிடம் ஒரு சதவீதம் கமிஷன் கோரியதாக எழுந்த புகாரில் அவரை பதவி நீக்கம் செய்வதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், விஜய் சிங்லா மீதான புகாரை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மான் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், … Read more

WEF உலக சுற்றுலா வளர்ச்சிப் பட்டியல்: தெற்காசியாவில் இந்தியா முதலிடம்

புது டெல்லி: உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள உலக நாடுகளுக்கு இடையிலான பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப் பட்டியலில் இந்தியா 54-வது இடம் பிடித்துள்ளது. அதேவேளையில், தெற்காசிய நாடுகளில் இந்தியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி சார்ந்த ஆய்வு உலக அளவில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இப்போது 2022-க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா துறை உலக அளவில் … Read more

பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை மாற்றுக: ஆட்சியரிடம் கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் புகார்

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆறு மாதங்களாக பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாத்திமா. இந்த புவியியல் துறையில் 350-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கல்லூரிக்கு சரிவர … Read more

மரண தண்டனை விதிக்கும் முன்பு குற்றவாளிகளின் மனநிலையை கவனத்தில் கொள்ளவேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ”கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும்போது, குற்றம் நடந்ததற்கு முந்தைய, பிந்தைய மனநிலையை கீழமை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்ற 3 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றமும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தன. இதனை … Read more

வானிலை முன்னறிவிப்பு: நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் வரும் வியாழக்கிழமை (மே 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெப்பச் சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 26-ம் தேதியன்று தமிழகம், … Read more

தாஜ்மகால் முதல் குதுப்மினார் வரை | சர்ச்சைக்குள்ளான 5 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மசூதிகள் – ஒரு பார்வை

இந்தியாவில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை மிக்க பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் மசூதிகள் சில இப்போது இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. வாரணாசி, ஆக்ரா, மதுரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் சர்ச்சையில் சிக்கிய இந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. இருந்தாலும் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த முகலாய கால கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் முன்னொரு காலத்தில் இந்து மக்கள் வழிபட்டு வந்ததாக ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர். … Read more

ஜூன் முதல் ஆக. வரை மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டாலும், காரிஃப் பருவத்தில் மட்டும் … Read more

குருவுக்கு பதில் சிஷ்யன்: 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு பணியாற்றும் சுனில்: யார் அவர்?

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றம் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்த நிலையில் தற்போது அந்த பொறுப்பை அவரது சிஷ்யனாக கருதப்படும் சுனில் கனுகோலு ஏற்கவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் … Read more

ராமநாதபுரம் இளைய மன்னர் என்.குமரன் சேதுபதி மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: ராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமான செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் … Read more

'பெட்ரோல், டீசல் வரியை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்' – பாஜக பொதுச்செயலர் சீனிவாசன்

விருதுநகர்: பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார். இதுகுறித்து விருதுநகரில் அவர் அளித்த பேட்டியில், “கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றுவோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக. திமுக உள்ளிட்ட கட்சிகளை போல பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் உழைப்பின் அடிப்படையில் பொறுப்புகளை கொடுப்பது பாஜக. பெட்ரோல் மற்றும் டீசல் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வரிச்சுமை முழுவதையும் மத்திய அரசே … Read more