“ஆஷாக்களை உருவாக்கியவன் என்ற முறையில் எனக்குப் பெருமிதம்” – அன்புமணி

சென்னை: “கரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை. அவர்களை உருவாக்கியவன் என்ற முறையில் அவர்கள் எனது பெருமிதம்” என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ”உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிவித்துள்ள ‘6 உலக சுகாதார தலைவர்கள்’ விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷாக்களுக்கு (ASHA) கிடைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியும், மன … Read more

'உடை என்பது ஒவ்வொருவரின் விருப்பத்திற்குரியது' – ஹிஜாப் குறித்து நிகத் ஜரீன் கருத்து

பெங்களூரு: உடை என்பது முற்றலும் ஒவ்வொருவரின் விருப்பத்திற்குரியது என்று ஹிஜாப் தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்துள்ளளார் உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன். 25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி வரையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை … Read more

பெருமாநல்லூர் அருகே பாறைக்குழியில் குளிக்கச் சென்ற இளம்பெண், சிறுமி உயிரிழப்பு

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே நாதம்பாளையத்தில் பாறைகுழியில் குளிக்கச் சென்ற இளம்பெண், சிறுமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெருமாநல்லூர் அருகே நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் கருப்புசாமி மனைவி உமா (28). அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் மாணவி ஈஸ்வரன் மகள் காவ்யா (15). இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 5-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நெருப்பெரிச்சல் அருகே உள்ள நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக இன்று காலை சென்றனர். அப்போது எதிர்பாராவிதமாக, கால் தடுக்கி சிறுமி காவ்யா, உமா … Read more

பிரதமர் மோடி மே 26-ல் சென்னை வருகை | நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகை தரும் நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக வரும் 26-ம் … Read more

“ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமானதே திராவிட மாடல் ஆட்சி” – அமைச்சர் சேகர்பாபு

கோவை: திமுக ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமான ஆட்சி. அந்த ஆட்சிக்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். கோவை பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக, பேட்டரி கார் வசதியை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: இந்துசமய அறநிலையத்துறையில், கடந்த ஆண்டு 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 1,641 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டு 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு … Read more

“741 பழமையான தமிழ் எழுத்துகளில் என் உருவப் படம்!” – தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி

சென்னை: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் 741 பழமையான தமிழ் எழுத்துகளால் உருவாக்கியுள்ள தனது உருவப்படத்தைக் கண்டு வியப்படைவதாகவும், அந்த உருவப்படத்தை தனது வீட்டில் வைக்க விரும்புவதாகவும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் 741 பழமையான தமிழ் எழுத்துகளைக் கொண்டு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் உருவப்படத்தை வரைந்திருந்தார். மேலும், இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்த கணேஷ், இதுபோன்று பழமையான எழுத்துகளைக் கொண்டு ஓவியம் வரைவது இதுவே முதல்முறை என்றும், இதுதொடர்பாக ஆனந்த் … Read more

The Donkey Palace: தமிழகத்தின் முதல் கழுதைப் பண்ணை – ஒரு விசிட்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதைகளுக்கென்று ஒரு பிரத்யேக பண்ணை “The Donkey Palace” கடந்த மே 14-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். கழுதைகள் குளம்பி வகையைச் சேர்ந்தவை. குதிரைகளை விட ஒரு மடங்கு கூடுதலாக மனிதர்களுக்கு உதவக் கூடியவை. மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்டவை. 3 அடி முதல் 5 அடி வரை வளரக்குடியது. தன்னை விட ஒன்றரை மடங்கு சுமையை சுமக்கக் கூடியது. பெரும்பாலும் இதன் பிறப்பிடங்கள் அடர்ந்த வனப்பகுதியாகவே … Read more

WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருதால் அங்கீகாரம்… யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 80 சதவீத பேர் பெண்கள்தான். உயர் சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள்தான். இவர்களில் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. மிகவும் குறைவான ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றும் இந்தக் கடைநிலைப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். உலக நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 10 லட்சம் … Read more

சிதம்பரத்தில் 3,000+ சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்: பின்புலம் என்ன?

கடலூர்: சிதம்பரம் தில்லை நடராஜா, தில்லை காளி சாமிகள் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் தில்லை நடராஜர், தில்லை காளி சாமிகள் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பல்வேறு இந்து அமைப்புகள், சிவனடியார்கள் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை … Read more

“பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன்” – தி கிரேட் காளி விளக்கம்

புது டெல்லி: “பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன்” என அக்கட்சியில் இணைந்து சுமார் 100 நாட்கள் கடந்த நிலையில் விளக்கம் கொடுத்துள்ளார் தி கிரேட் காளி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் காளி. தலிப் சிங் ராணா என்பதுதான் அவரது இயற்பெயர். 49 வயதான அவர் மல்யுத்த விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர். WWE விளையாட்டில் சில காலம் விளையாடி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சொந்தமாக WWE பயிற்சி மையம் ஒன்றும் வைத்துள்ளார். இந்நிலையில், … Read more