புதுச்சேரி மின்துறை தனியார் மயம்: புதிய இணைப்பு, மீட்டர் ரீடிங், எழுத்துப் பணிகளைப் புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாதிக்காத வகையில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். புதிய இணைப்பு, மீட்டர் ரீடிங், எழுத்து பணிகளை முற்றிலும் புறக்கணித்தாலும் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் தருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் … Read more

கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை குறித்த பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம், கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம் சாஸ்தான்கோட்டையில் தன் கணவரின் வீட்டில் குளியலறையில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்டதாக கணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது மர்மமான மரணமாக அது பார்க்கப்பட்டது. வாட்ஸ்-அப் செய்திகள், அழைப்புப் பதிவுகள் அடிப்படையில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கைதுசெய்யப்பட்டார். கேரள அரசும் அவரை முதலில் அவரைப் பணி இடைநீக்கமும் பின்னர் பணி நீக்கமும் … Read more

ஆர்ப்பாட்டத்துக்காக குவியும் சிவனடியார்கள்: சிதம்பரத்தில் பரபரப்பு, போலீசார் குவிப்பு

கடலூர்: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்காக சிவனடியார்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நடராசர் கோயிலில் உள்ள கனகசபை மீதேறி தெய்வத்தமிழ் பேரவையினர் தேவாரம், திருவாசகம் பாடினர். உலகப் புகழ்பெற்ற நடராசர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சைவத் திருத்தலங்களில் இது முதன்மையானதாகும். வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் தினசரி கோயிலுக்கு வந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை வழிபட்டு செல்வர். எப்பொழுதும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில், … Read more

ம.பி.யின் போபால் ஜாமியா மசூதிக்கும் சிக்கல்: கோயிலை இடித்து கட்டியதாக இந்துத்துவா அமைப்புகள் புகார்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஜாமியா மசூதியும், சிவன் கோயிலை இடித்துக்கட்டப்பட்டதாக புகார் எழுப்பும் இந்து அமைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்ட மிட்டுள்ளன. உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் கடந்த 2019-ல் ராமர் கோயில் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதன் மேல்முறையீட்டு மனுவில் இந்துதரப்பினருக்கு கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்போது, மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி, இதரவரலாற்றுக்காலப் புனிதத் தலங்கள் உள்ளநிலையிலேயே எந்த மாற்றம் இன்றி தொடரும் எனவும் … Read more

ஜூன் 10-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மே 24) தொடங்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைய உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 காலியிடங்கள் உருவாக உள்ளன. குறிப்பாக, திமுகவின் டி.கே.எஸ்.இளங்காவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. விரைவில் குடியரசுத் தலைவர்பதவிக்கான தேர்தல் நடைபெற … Read more

டெல்லியில் சூறைக்காற்றுடன் கனமழை: பல இடங்களில் மின் தடை, போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் முதல் பெய்த கனமழையின் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால், பல … Read more

மாநில அரசுகளை குறைக்க கோருவது நியாயமற்றது – பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் கலால் வரியை குறைப்பதாக கடந்த மே 21-ம்தேதி மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2014 முதல் 2021 வரை மத்திய அரசு கடுமையாக உயர்த்திய பெட்ரோல், டீசல் மீதானவரிகளை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தற்போது மத்திய அரசு செவி சாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் … Read more

பாட்மிண்டனில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார். தாய்லாந்தின் பாங்காங் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியா அணியை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்திய அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்தனர். 73 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அணி அந்தப்போட்டியில் தங்கம் வெல்வது … Read more

‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து முன்னெடுப்பு; தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க்: ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

சென்னை: பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள புதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. பாரதியின் ‘புதுமைப் பெண்’ என்ற தத்துவத்தில் உத்வேகம் பெற்ற தனிஷ்க், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து, தமிழ்க்கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘புதுமைப் பெண்’ தமிழ்க்கலாச்சாரத்தின் பாதுகாவலராக வும், புதுமையின் முன்னோடி யாகவும் இருப்பதுடன், தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை … Read more

தோள்பட்டை பந்துகிண்ண மூட்டு உடைந்து, ஜவ்வு கிழிந்த தேசிய குத்துச்சண்டை வீரருக்கு நவீன அறுவைசிகிச்சை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சாதனை

சென்னை: கடலூரை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் பாலாஜி (21). இவர் 10 வயது முதல் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் குத்துச்சண்டை போட்டியின் போது அடிபட்டதில், இவரது இடதுபக்க தோள்பட்டை இறங்கியது. கையை சுழற்றி தோள்பட்டையை சரிசெய்து கொண்ட அவர் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேசிய அளவிலான 2-வது போட்டியின்போது தோள்பட்டை மீண்டும் இறங்கியது. பின்னர், சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விளையாட்டு காயங்களுக்கான துறையின் தோள்பட்டை சீரமைப்பு … Read more