ஆஸ்திரேலியா | புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் அந்தோணி அல்பானீஸ்
கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese). 59 வயதான அந்தோணி அல்பானீஸ், நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1996 வாக்கில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர், அவைத்தலைவர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் 31-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சியை சார்ந்தவர். 2019 முதல் அவர் அக்கட்சியின் தலைவராக உள்ளார். … Read more