சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

கரூர்: சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். கரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிலரங்கம் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று (மே 22ம் தேதி) நடைபெற்றது. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எம்.பி. அப்துல்லா, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து … Read more

சுதந்திரத்திற்குப் பின் முதன்முறை | மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு; நாளை முதல்வர் திறந்துவைக்கிறார்

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடுகிறார். காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது. இதனால் அணை நீர் மட்டம் 116.67 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (24 ஆம் தேதி) அணையில் இருந்து நீர் திறந்துவிடுகிறார். நாளை நீர் திறப்பு: சேலம் … Read more

மத்திய அரசின் வரி குறைப்பு எதிரொலி | பெட்ரோல், டீசல் விலை எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு குறைந்தது?

புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்ததையடுத்து, பல்வேறு மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளன. உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை … Read more

சேலத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பு, பெட்ரோல் பரிசாக வழங்கிய உறவினர்கள் 

சேலம்: சேலத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பு, பெட்ரோல் போன்றவற்றை உறவினர்கள் பரிசாக வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு எரிபொருளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு உறவினர்கள் மண் அடுப்பு, பெட்ரோல், விறகுகளை பரிசாக வழங்கிய ருசிகர சம்பவம் நடந்தது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்காட்டை … Read more

'ராகுல், நீங்கள் இத்தாலிய கண்ணாடியை அகற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைக் காணுங்கள்' –  அமித் ஷா

இத்தாலிய கண்ணாடியை அகற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைக் காணும்படி ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நமது காங்கிரஸ் நண்பர்கள் எப்போது பார்த்தாலும் எட்டு ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கண்களை மூடிக்கொண்டால் எப்படி வளர்ச்சியை காண முடியும். ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இத்தாலிய கண்ணாடியை கழற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைப் பாருங்கள். இந்த எட்டு … Read more

'72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால்..’ – அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: “திமுக அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையையும் உருளைக்கு ரூ.100 குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் … Read more

'பதவிக்காக இப்படி செய்வதா?' – காங்கிரஸூக்கு தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா கேள்வி

‘பதவிக்காக ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணி வைப்பதா?’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா காங்கிரஸூக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் 7 பேரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. அதேநேரத்தில் குற்றவாளிகள் … Read more

உதகையில் தொடரும் மழை: மலர் கண்காட்சி சிறப்பு அலங்காரம் சரிந்ததால் பதற்றம்

உதகை: உதகையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்ற சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட … Read more

கர்நாடகாவில் கனமழை பெய்வதால் காவிரியில் இருந்து த‌மிழகத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் குடகு, மைசூரு, ஷிமோகா, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை காலத்திலும் காவிரி, கபிலா ஆகிய‌ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள‌ கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும், கபிலா ஆற்றின் குறுக்கேயுள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. … Read more

'நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்' – முகத்தை மூடி செய்தி வாசித்த ஆப்கன் பெண் செய்தியாளர்கள் வேதனை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உத்தரவை ஏற்று பெண் நிருபர்களும், செய்தி வாசிப்பாளர்களில் தங்கள் முகத்தை துணியால் மூடி செய்தி வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச … Read more