திருத்துறைப்பூண்டியில் 16-ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டாக 2 நாள் தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும், விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் தேசிய அளவிலான நெல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இந்த நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 16-வது ஆண்டாக … Read more

10,200 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13.75 கோடியில் ஸ்மார்ட்போன் – தமிழக அரசு சார்பில் டெண்டர்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.13.75 கோடியில் 10 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த ஆண்டு வழங்குவதற்காக ரூ.13.75 கோடியில் 10,200 ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய மாற்றுத் … Read more

சிலிண்டர் விலை 66.88% உயர்ந்தும் மானியம் தர மறுப்பதா? – மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் மானியம் நிறுத்தப்பட்ட போது இருந்த சமையல் எரிவாயு விலை இப்போது 66.88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்ந்த பிறகும் அதற்கு மானியம் தர மத்திய அரசு மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை வெள்ளம், நிலச்சரிவால் 58 பேர் உயிரிழப்பு – அசாமில் 8 லட்சம் பேர் பாதிப்பு

குவாஹாட்டி: அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பிஹாரில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் மட்டும் 8 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய மழையால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதன்படி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், … Read more

'அண்ணா, கலைஞர், ஸ்டாலினை அடுத்து உதயநிதி' – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர்: அண்ணா, கலைஞர், ஸ்டாலினை அடுத்து உதயநிதி வருகிறார். இதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது. வாரிசாக இருந்தாலும் கட்சியில் கஷ்டப்பட்டுத்தான் மேலேவருகிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் அய்யாவு பாண்டியன் தலைமை வகித்தார் . இதில் வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது … Read more

உதகை 200 | நீலகிரி மாவட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் : முதல்வர் பேச்சு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரத்யேக மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உதகை நகரின் 200-வது ஆண்டு விழா இன்று (மே 21) உதகையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.118.79 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.34.30 கோடி மதிப்பில் 20 புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 9,500 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை … Read more

குரூப் 2, 2ஏ தேர்வு | கரூரில் தாமதமாக வந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுப்பு: தேர்வர்கள் ஏமாற்றம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வெழுத தாமதமாக வந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கரூர் மாவட்டத்தில் 59 தேர்வு மையங்களில இன்று (மே 21) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் 17,114 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 9.30 மணிக்கு தேர்வுகள் … Read more

ஜம்மு சுரங்கப்பாதை விபத்து: 36 மணிநேர மீட்புப் பணி, சடலங்களாக கைப்பற்றப்பட்ட 10 தொழிலாளர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்தில், 36 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கோனி நல்லா என்ற இடத்தில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சுரங்கப்பாதையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கி … Read more

சென்னை மெட்ரோ குடிநீர் தற்காலிகப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளை செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை … Read more

சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு நடிகர் அர்ஜுன் ஆதரவு

கோவை: “மண்ணைச் சேமிப்பது உங்கள் சொந்த குடும்பத்தையும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவதற்கு சமம்” என்று மண் காப்பதன் அவசியம் குறித்து நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அனைத்து நாடுகளைச் சேர்ந்த அனைத்து துறை பிரபலங்களும் பொதுமக்களும் பேராதரவு அளித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விஞ்ஞானிகள், தொழில்துறையைச் சார்ந்தவர்களும் ஆதரவு தந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி வருகின்றனர். … Read more