“தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது” – டிடிவி தினகரன்

திருவண்ணாமலை: “தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். திருவண்ணாமலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் தினகரன் கூறும்போது, “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதைப்பற்றி இப்போது பேசுவதே இல்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியபோது போராட்டம் நடத்தியவர்தான் ஸ்டாலின். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் … Read more

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது. உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்காக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

உதகை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் உதகையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என … Read more

“பெரும்பாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தில் குடியிருப்புகள்: மே 26-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்” – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: “பெரும்பாக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி திறந்து வைக்கிறார்” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில்நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,”தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் … Read more

மேட்டூர் அணை திறப்புக்கு முன்பு அரசு உடனடியாக செய்ய வேண்டியவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பட்டியல்

சென்னை: “மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை முழுமையாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் அபரிமிதமான மழையினால் மேட்டூர் அணைக்கு … Read more

இலங்கையில் 2 வாரங்களாக நீடித்து வந்த அவசர நிலை நீக்கம்

கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை 2 வாரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே 6-ம் தேதி முதல் நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்தார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக … Read more

'திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் அமளிக் காடாக மாறிவிடுகிறது' – ஓபிஎஸ்

சென்னை: திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகம் அமளிக் காடாக மாறிவிடுகிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவல் துறையினரை பார்த்து சமூக விரோதிகள் அஞ்சுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கின்றது என்று பொருள். ஆனால், தற்போது தமிழகத்தில் இதற்கு முற்றிலும் நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது. “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த … Read more

“ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கையில் ரத்தக் கண்ணீர் வடிகிறது" – கே.எஸ்.அழகிரி

காஞ்சிபுரம்: “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால், அந்தக் கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கிறபோது, இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது“ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி … Read more

ஹைதராபாத்தில் நடந்தது போலி என்கவுன்ட்டர் – உச்ச நீதிமன்றத்தில் சிர்புர்கர் கமிஷன் அறிக்கை

புதுடெல்லி: ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (28), கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி இரவு 4 பேர் கொண்ட கும்பலால் ஒரு லாரியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பின்னர், அந்த கும்பல், பிரியங்கா ரெட்டியை ஒரு மேம்பாலத்தின் கீழே பெட்ரோல் ஊற்றி கொடூரமாக உயிரோடு எரித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து 4 பேரையும் ஹைதராபாத் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். இவர்களை விசாரணைக்காக கடந்த 2019 … Read more

மேட்டூர் அணை | தொடர்ந்து 209 நாட்களாக 100 அடிக்கு கீழ் குறையாமல் நீர் இருப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் தொடர்ந்து 209 நாட்களாக 100 அடிக்கும் கீழ் குறையாமல் நீர் இருப்பதால், நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கு குறுவை மற்றும் சம்பாவுக்கு நீர் பற்றாக்குறை இருக்க வாய்ப்பு இருக்காது என டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு விவசாயப் பணிகளை துவக்கியுள்ளனர். காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி அணை மேட்டூர் அணை மூடப்படுவது … Read more