பலாத்காரங்களை நிறுத்துங்கள் | உக்ரைன் மகளிருக்காக கேன்ஸ் விழாவில் பெண் நிர்வாணப் போராட்டம்

கேன்ஸ்: உக்ரைன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மேலாடை இல்லாமல் நிர்வாணப் போராட்ட நடத்தினார். அவர் தனது மார்பு, வயிற்றுப் பகுதியில் உக்ரைன் கொடி நிறப் பின்னணியில் ‘எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்’ என்று எழுதியிருந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் போராளி சிவப்புக் கம்பளப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அவர் முதுகில் ஸ்கம் (SCUM) என்றும் … Read more

பயன்பாட்டுக்கு வரும் மஞ்சப்பை இயந்திரம்: பொது இடங்களில் வைக்க திட்டம் 

சென்னை: பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. Manjapai Vending Machine is finally here. … Read more

மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சி – பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்ப சில கட்சிகள் முயற்சிப்பதாகவும் அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் … Read more

இனி சென்னையில் இரு சக்கர வாகன பின்சீட்டில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

சென்னை: இரு சக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு … Read more

நாடு முழுவதும் இன்று முதுநிலை நீட் தேர்வு 

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 2022 – 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் பேர் இந்தத் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 256 மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், தேனி, விழுப்புரம், ஈரோடு, … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: தமிழகம் முழுவதும் 11 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் குரூப் 2 தேர்வை 11 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வருகை புரிந்தனர். 9 மணிக்கு பிறகு தேர்வு அறைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கிய 12.30 மணிக்கு நிறைவு … Read more

பொதுக் கழிவறையில் 'அவுரங்கசீப் தலைமையகம்' போஸ்டர்: டெல்லி பாஜக தலைவரால் சர்ச்சை

புதுடெல்லி: டெல்லியின் பொதுக் கழிவறையில், ‘அவுரங்கசீப் தலைமையகம்’ எனப் பெயரிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதை அங்குள்ள பாஜக தலைவர் ஒட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளார். தலைநகரான டெல்லியின் உத்தம்நகரில் ஒரு பொதுக் கழிவறை உள்ளது. இதன் மீது டெல்லி பாஜகவின் தலைவர்களில் ஒருவரான அச்சல் சர்மா என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியுள்ளார். இதன் படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, “தம் பகுதியிலுள்ள கழிவறைகளுக்கு, ‘அவுரங்கசீப் தலைமையகம்’ எனப் பெயரிட வேண்டும் என இந்துக்களிடம் … Read more

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கான டெண்டர் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேடு செய்துள்ளதாக குற்றம்சாட்டி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் புலன்விசாரணையை 10 வாரங்களில் முடித்து கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை … Read more

சிவலிங்கம் பற்றி சர்ச்சைக் கருத்து: டெல்லி இந்து கல்லூரி பேராசிரியர் கைது

கியான்வாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி டெல்லி இந்து கல்லூரியின் பேராரிசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்து கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார் ரத்தன் லால். இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அண்மையில் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் கருத்து மதத்தின் அடிப்படையில் … Read more

ஐரோப்பாவில் மங்கிபாக்ஸ் பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்தது இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே … Read more