பேருந்து நடத்துநர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் – தீர்வுக்கான திட்டம் என்ன?
சென்னை: முதன்முதலாக பேருந்து இயக்கப்பட்ட காலம் முதல் நடத்துநர் – பயணிகள் இடையேயான மோதல்போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அண்மையில் பயணி ஒருவர் தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம், இந்த மோதலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான அவசியத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் 10,417 வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் 20,304 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்குசுமார் 1.55 கோடி பேர் பயணிக்கின்றனர். நடத்துநர் … Read more